நடிகர் ரஜினிகாந்த் அவருடைய வீட்டு கேட்டை திறந்தால் கூட இன்றைய ஊடகங்களின் அது தலைப்புச் செய்தி, அந்த அளவுக்கு மிகப் பிரபலமாக இருக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகம் தான் அவருடைய இந்த பிரபலத்துக்கு காரணம். அந்த வகையில் காலம் கடந்து தனது அரசியல் அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தாலும் தமிழகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அவரது அரசியல் அறிவிப்பு.
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட தேதி முதல் தன்னுடைய உடல் நிலையை குறிப்பிட்டு தான் அரசியலுக்கு வரவில்லை என கை விரித்த தேதி வரை. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் ரஜினிகாந்த் குறித்து தான் அணைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியும், விவாதமும் நடைபெற்று வந்தது. அந்த அளவுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தவர் ரஜினிகாந்த்.
பெரும்பாலும் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு வெளியே தான் பத்திரிகையாளரை சந்தித்து பேசுவார். பத்திரிக்கையாளருக்கு ரஜினிகாந்த் தகுந்த மரியாதை அளிப்பது கிடையாது, வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு அமர நாற்காலி கொடுத்து ரஜினிகாந்த் பேட்டி கொடுக்கலாம்.ஆனால் அவர் தனது வீட்டின் கேட்டுக்கு வெளியே நிற்க வைத்து ஒவ்வொரு முறையும் பேட்டி கொடுத்து வருவது பத்திரிகையாளரை அவமதிக்கும் செயல் என்கிற குற்றச்சாட்டும் உண்டும்.
ஆனால் தொடர்ந்து பத்திரிக்கையாளர் அவமாரியாதை செய்யும் ரஜினிகாந்த் எப்போது அவர் வீட்டு கேட்டை திறப்பார் என காத்திருக்கும் கட்டாயத்தில் தான் பத்திரிக்கையாளர்களின் நிலைமையும் உண்டு. இந்நிலையில் ரஜினிகாந்த் ஏன் பத்திரிக்கையாளரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்கின்ற தகவலும் பரவலாக வெளியாகி உள்ளது.
ஒரு முறை இசைஞானி இளையராஜா தனது வீட்டிற்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து பேட்டி கொடுத்துள்ளார்.ஆனால் அங்கே சென்ற பத்திரிகையாளர்கள் அவர் வீட்டில் இருந்த தோட்டத்தில் அவர் ஆசை ஆசையாக வளர்த்த செடிகள் அனைத்தையும் நாசம் செய்து உள்ளார்கள். ஒரு காட்டிற்குள் யானை புகுந்து எப்படி அட்டூழியம் செய்யுமோ அந்த அளவுக்கு அவருடைய வீட்டை நாசம் செய்து வைத்துள்ளார்கள் பத்திரிகையாளர்கள்.
இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளார் இளையராஜா என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பின்பு தான் பெரும்பாலான நடிகர்கள் பத்திரிகையாளர்களை வீட்டிற்குள் உள்ளே அழைத்து பேட்டி கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை வீட்டின் உள்ளே அழைத்து பேட்டி கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.