நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கி தோல்வியை தழுவியவர். அதே போன்று ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அவருடைய தந்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோன் இருவர் நடிப்பில் கோச்சடையான் என்கின்ற அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி மிக பெரிய தோல்வியை சந்தித்தார்.
கோச்சடையான் படம் மூலம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் அவருடைய இளைய மகள் சௌந்தர்யா. இதன் பின்பு இரண்டு மகள்களிடம் இனி படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் தன்னை அணுக வேண்டாம் என கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பின்பு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா தந்தை ரஜினியை வைத்து படம் இயக்க ஆசை பட்டு தன்னுடைய விருப்பத்தை ரஜினியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ஏற்பட்ட நஷ்டம் போதும் என்று காரணத்தை கூறி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் தான் சினிமாவில் அதிகம் கற்று கொண்டேன், தனக்கு அனுபவம் உள்ளது, நீங்களே என் மீது நம்பிக்கை வைக்க வில்லை என்றால், மற்றவர்கள் யார் வைப்பார்கள் என தந்தை ரஜினிகாந்திடம் பரிதாபமா கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அதற்கு குடும்பம் வேறு தொழில் வேறு என்பதை சுட்டிக்காட்டி, அதனால் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் கடைசி வரை ஒப்பு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தான் இயக்கும் படத்தை தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன் வரவில்லை, அதனால் அப்பா நீங்க கெஸ்ட் ரோலாக நடித்தால் கூட போது, இதை காரணமாக வைத்து நான் இயக்கும் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைத்து விடுவார்கள் என ரஜினிகாந்தை கடும் டார்ச்சர் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
மகள் ஐஸ்வர்யா கட்டாயத்தினால்,அவர் இயக்கும் புதிய படத்தில் கெஸ்ட் ரோலாக நடிக்க ஒப்பு கொண்ட ரஜினிகாந்த், ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் இது என்னுடைய படம் என்று விளம்பரம் செய்யவும் கூடாது, என்னுடைய பெயரை பயன்படுத்தி வியாபாரமும் செய்ய கூடாது, மேலும் இந்த படத்தின் எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக நடிக்கும் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த படம் கதை கிரிக்கெட் தொடர்பான கதை என்பதால், கிரிக்கெட் நன்கு விளையாட தெரிந்த நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரில் ஒருவரை தான் நடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் இருவருக்கும் மார்க்கெட் இல்லை என்பதால் நடிகர் அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
கிரிக்கெட் தொடர்பான இந்த கதையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரராக ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் என்று சொன்னாலும் கூட, ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இந்த படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகையால் இதை எப்படி கெஸ்ட் ரோல் என்று ரசிகர்கள் எடுத்து கொள்வார்கள் என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.