நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே, அந்த படத்தில் அவருக்கான இடம்பெறும் ஓப்பனிங் பாடலை கொண்டாட்டுவதற்கே ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள், அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலே அவருடைய ஓப்பனிங் பாடல்களும் மிக பிரமாண்டமாக இருக்கும். குறிப்பாக ஓப்பனிங் பாடலில் ரசிகர்களை துள்ளலான ஆட்டம் போட வைக்கும் இசையுடன் சேர்ந்து இடப்பெறும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காக எழுதப்பட்டதாக இருக்கும்.
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் என்ட்ரி கொடுக்கும் ஓப்பனிங் பாடலை கொண்டாடுவதற்காகவே ரசிகர் கூட்டம் திரையரங்குக்கு படை எடுத்து செல்லும். அந்த வகையில் அண்ணாமலை படத்தில் வந்தேன்டா பால்காரன், பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி, அருணாச்சலம் படத்தில் அதாண்டா இதாண்டா, படையப்பா படத்தில் எம் பேரு படையப்பா. சந்திரமுகி படத்தில் தேவுடா தேவுடா போன்ற ரஜினிகாந்த் ஓப்பனிங் பாடல்கள் மிக பெரிய வரவேற்பை பெற்று மக்களால் கொண்டாட பட்டன.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார், இந்த படத்தின் காவலா பாடல் சமீபத்தில் வெளியானது, இந்த பாடல் முழுக்க முழுக்க தமன்னாவுக்கான பாடலாக அமைத்தது, அதை தொடர்ந்து தற்பொழுது ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் பாடல் ரஜினிக்கான பாடலாக வெளியாகியுள்ளது.
பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் ஓபனிங் சாங் கவிஞர் வாலி, வைரமுத்து போன்ற மிகப்பெரிய பாடல் ஆசிரியர்கள் தான் எழுதுவார்கள். ஆனால் தற்பொழுது ஜெயிலர் படத்தில் வெளியாகியுள்ள ரஜினிகாந்த் ஓப்பனிங் பாடலை அறிமுகம் இல்லாத யாரையோ எழுத வைத்து ரஜினியை எந்த அளவுக்கு இழிவு படுத்த முடியுமோ அதை சீரும் சிறப்புமாக அனிருத் உடன் இணைந்து செய்துள்ளார் நெல்சன் என கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் யாரும் போட்டி போட முடியாத அளவுக்கு மிக பெரிய உயரத்தில் அனைவராலும் மதிக்க கூடிய இடத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்கிற சச்சை விஜய் நலம் விரும்பிகள் சிலர் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் இதற்கெல்லாம் பதில் கொடுக்காமல், அட சீ அங்கிட்டு ஓரமா போய் விளையாடுங்கப்பா, சின்ன பசங்களா என்று கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ரஜினிக்கு கௌவுரவமாக இருக்கும்.
ஆனால் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ரஜினிகாந்த் பாடலில் இடம்பெற்ற வரிகளால்,சின்ன பசங்களுடன் ரஜினியே போட்டிக்கு அழைப்பது போன்று அமைத்துள்ளது. ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற வரிகளில், ஒன் அலும்ப பார்த்தவன்….ஒங்க அப்பன் விசில கேட்டவன்……என்கிற வரிகள் விஜய் மற்றும் அவருடைய தந்தையை குறிப்பது போல் அமைத்துள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் அதே பாடலில் இடம்பெற்றுள்ள பேர தூக்க நாலும் பேரு….. பட்டத்த பறிக்க நூறு பேரு……என்கிற வரிகள் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு நேரடியாக பதிலடி கொடுத்து விஜயை தன்னுடைய போட்டியாளராக கருதி ரஜினி விஜய்யுடன் நேரடியாக மோதுவது போன்று இந்த பாடல் வரிகள் அமைத்துள்ளதால், ரஜினி தன்னை தானே வயதில் குறைவான விஜயுடன் மோதுவது அவரை அவரே இழிவு படுத்துவது போன்று அமைத்துள்ளது என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.
மேலும் அதே பாடல் வரிகளில் குட்டி செவுத்த எட்டி பார்த்தா,…. உசிரு கொடுக்க கோடி பேரு..என ரஜினிகாந்த் ரசிகர்கள் குட்டி செவுத்துல உட்கார்ந்து குட்டிய சுவரா போய்விட்டார்கள் என்பது போன்று அமைத்துள்ளது,இதற்க்கு மேல் ரஜினிகாந்த் ரசிகர்களை அவமான படுத்த முடியாது என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அந்த வகையில் ஜெயிலர் படத்தின் மூலம் அனுபவம் இல்லாத யாரோ ஒரு பாடலாசிரியர் பாடல் எழுத வைத்து, ரஜினியை எந்த அளவுக்கு இழிவு படுத்த முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார் நெல்சன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.