நிம்மதியின்றி கண்ணீரில் மிதக்கும் இயக்குனர் சங்கர்… மகள் அதிதி தான் பிரச்சனையா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் சங்கர், தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்றவர் ஷங்கர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷங்கர் அவருடைய இரன்டு மகள்களால் நிம்மதியின்றி தவித்து வருவதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் அவருடைய தந்தை விருப்பப்படி மருத்துவம் படித்து முடித்தார். முடித்துவிட்டு, நான் டாக்டர் தொழில் பார்க்க மாட்டேன், சினிமாவில் தான் நடிப்பேன் என்றால் ஒரு தந்தைக்கு எப்படி வயிறு எரியும் என தெரிவித்த பயில்வான் ரங்கநாதன். மேலும் இல்லம்மா உன்னை எவ்வளவு கோடி செலவு செய்து டாக்டர் படிக்க வைத்தால், நீ என்னவென்றால் சினிமாவில் நடிக்கிறேன் என்கிறாய்.!

உன்னுடைய தந்தை சினிமா இயக்குனர் நாள் சொல்கிறேன், சினிமாவில் நடிக்க வேண்டாம் என எவ்வளவோ சங்கர் கெஞ்சி பார்த்ததாகவும், ஆனால் மகள் பிடிவாதமாக நான் சினிமாவில் நடித்து தீருவேன் என்று இருந்ததால், சரி ஒரு படம் நடி என்று சங்கர் மகளின் ஆசைக்கு பச்சை கொடி காட்டியவர், மேலும் அதிதி நடித்த முதல் படத்தில் கார்த்திக் கதாநாயகன் என்பதால் ஒரு கௌரவமான ஒரு நடிகர் என்பதால் அந்த படத்தில் மகளை சங்கர் நடிக்க வைத்ததாகவும்.

மேலும் விருமன் படத்தில் அதிதி சங்கர் கவர்ச்சிகரமாக இல்லை என்றாலும், ஒரு கிராமத்து கதைக்கு ஏற்ற பெண்ணாக இருந்தார். விருமன் படம் வெற்றி அடைந்ததும் மாவீரன் படத்தில் கமிட்டானார் அதிதி சங்கர், ஆனால் மாவீரன் படத்தில் அதிதி சங்கர் கமிட்டாகி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது அவருடைய தந்தை இயக்குனர் சங்கருக்கு தெரியாது என தெரிவித்துள்ள பயில்வான் ரங்கநாதன்.

பேப்பரை பார்த்து தான் மகள் இரண்டாவது படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்கின்ற தகவலை சங்கர் அறிந்து மகளிடம் என்னமா இதெல்லாம் வேண்டாம் என்று எவ்வளவோ சங்கர் சொல்லிப் பார்த்தார். ஆனால் அதிதி சங்கர் அடுத்தடுத்து நான்கு படங்களில் அட்வான்ஸ் தொகையை வாங்கி போட்டு போட்டு முழு நேர நடிகையாக வருவதற்காக ஆயத்தம் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் எல்லை மீறி சென்று விட்டார் என சங்கர் புரிந்து கொண்டதாகவும், அதனால் அவருக்கு நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். இதனால் தான் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் இரண்டு படமே விரைவில் எடுத்து முடிக்க முடியாத அளவுக்கு அவருக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாததுதான் என தெரிவித்த பயில்வான் ரங்கநாதன்.

மேலும் சினிமாவில் பலரை மகிழ்ச்சியடைய செய்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கண்ணீர் கடலில் தத்தளித்து வருவதாகவும், வீட்டில் அவரால் நிம்மதியா சோறு சாப்பிட முடியவில்லை, நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதுதான் சங்கரின் நிலைமை என தெரிவித்த பயில்வான் ரங்கநாதன். இதே போன்ற
நிலைமையில் தான் ரஜினிகாந்த்தும் தன்னுடைய இரண்டு மகள்களால் நிம்மதியின்றி தவிப்பதாகவும்

ஆயிரம் கோடி இருந்தால் என்ன 500 கோடி இருந்தால் என்ன வீட்டில் நிம்மதி இல்லையே. அதனால் சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் விலை உயர்ந்த காரில் செல்கிறார்கள், மிகப்பெரிய பங்களாவில் வசிக்கிறார்கள், விலை உயர்ந்த சரக்கு குடிக்கிறார்கள் என்று நினைத்து மக்கள் ஏமாற வேண்டாம். சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.