அப்ப வந்து சொல்லு நீ சூப்பர் ஸ்டார் என்று… இப்ப சொல்வதா… விஜய்க்கு விடுக்கப்பட்ட சவால்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில், ஒன் அலும்ப பார்த்தவன்…. ஒங்க அப்பன் விசில கேட்டவன்……ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்…..அதில் பேர தூக்க நாலும் பேரு….. பட்டத்த பறிக்க நூறு பேரு…… குட்டி செவுத்த எட்டி பார்த்தா … உசிரு கொடுக்க கோடி பேரு.. என்கிற வரிகள் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தொடர்ந்து சீண்டி வரும் விஜய்க்கு தரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் விருப்ப படியே இடம் பெற்ற பாடல் வரிகள் தான் இது என்று மிக பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், ரஜினியின் பேச்சு விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமையும் என பலரும் எதிர்பார்க்க பட்டு வந்த நிலையில், ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய ஒவ்வொரு பேச்சு, குறிப்பாக ரஜினி சொன்ன கழுகு, காக்கா கதையில் கூட வவிஜயை மனதில் வைத்து தான் விஜய் காக்கா, காக்கா சண்டை போடும், தொந்தரவு கொடுக்கும் ஆனால் அதனால் உயர பறக்க முடியாது.

ஆனால் கழுகு எதுவுமே செய்யாமல் மேலே பறந்து போய் விடும் என ரஜினி பேசியது கூட சமீப காலமாக சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விஜய்க்கு பதிலடி கொடுக்க தான் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய்க்கு தரமான பதிலடியை ரஜினிகாந்த் கொடுப்பர் என்பது பலரும் எதிர்பார்த்த ஓன்று தான். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் அமைத்தது ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேச்சு.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கும், நாங்கள் ரஜினிகாந்த் இடத்தை பிடித்துவிட்டோம், அதனால் எங்களுக்கு தான் சூப்பர் ஸ்டார் பட்டம் எங்களுக்கு தான் என தன்னுடைய சகாக்களை விட்டு கூச்சலிட வைக்கும் நடிகர்களுக்கு தரமான பதிலடியாக அமைத்துள்ளது கலாநிதிமாறனின் பேச்சு. அவர் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசுகையில், என்னுடைய தாத்தா ரஜினிகாந்த் படங்களை ஒன்று விடாமல் விரும்பி பார்ப்பாங்க.

என் அப்பாவும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே படத்தை பார்ப்பாங்க.என்னைப் பற்றி சொல்லவே தேவையில்லை நான் ரஜினியோட எந்த அளவுக்கு ரசிகன் என்பதை அனைவருக்கும் தெரிந்தது. அதே மாதிரி என் பொண்ணு என்னை விட ஒரு பங்கு மேலே ரஜினி படம் என்றால் அந்த அளவுக்கு ரசித்துப் பார்ப்பார். மூன்று வயது குழந்தைகள் கூட ரஜினியின் பாடல்கள் வந்தால் அவ்வளவு சுறுசுறுப்பாக மாறிவிடுகிறார்கள்.

இப்படி ஐந்து தலைமுறையாக அவரை கொண்டாடி வருகிறோம். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி இருக்கிறது. அத்துடன் தளபதி விஜய் சொன்ன மாதிரி கண்டிப்பாக போட்டி தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் ரஜினியுடன் போட்டி போடுவதற்கு வேறு யாராலயும் முடியாது. அவரை தான் அவருக்கு போட்டி.

அது மட்டுமில்லாமல் சினிமாவிற்கு புதுசாக நடிக்க வரவங்களும் சரி, ஏற்கனவே முன்னணியில் இருப்பவர்களும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள். ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் அவர்கள் எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு தான் சொல்லிக் கொள்கிறேன். ரஜினி அவர்களுக்கு தற்போது 72 வயதாகிறது, இப்பொழுதும் இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

அதே மாதிரி உங்களுக்கும் 72 வயதில் இதே மாதிரி தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்னு காத்திருந்தால் அப்பொழுது சொல்லுங்கள் ரஜினியின் இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அதுவரை தமிழ்நாட்டில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்று ஜெயிலர் மேடையில் விஜய்யை உங்களுக்கு 72 வயதாகும் போது தயாரிப்பாளர்கள் உங்கள் வீட்டில் வாசலில் காத்திருந்தால் அப்போது சொல்லுங்க ரஜினி இடத்துக்கு என்று விஜய்யை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு உள்ளது கலாநிதிமாறனின் பேச்சு என்கின்றனர் நிகழ்ச்சியை நேரில் பார்த்த ரசிகர்கள்.