விஜய்க்கு போன் போட்ட ரஜினிகாந்த்… அரசியல் வருகைக்குக்கு வயித்தெரிச்சலை வெளிப்படுத்திய ரஜினி…

0
Follow on Google News

நடிகர் விஜய் – ரஜினி இருவருக்கும் இடையிலான மோதல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பெரிய அளவில் சமீப காலமாக வெடித்தது, சூப்பர் ஸ்டார் யார்.? ரஜினியா.? விஜயா? என நடிகர் ரஜினிகாந்தை ஓவராக சீண்ட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரஜினிகாந்த், காக்கா கழுகு கதை சொல்லி விஜய் காக்கா, நான் கழுகு என்பது போன்று பேச மேலும் விஜய் ரஜினிக்கு இடையிலான மோதல் அதிகரித்தது.

இந்நிலையில் சுமார் 25 வருசத்துக்கு மேலாக இதோ அரசியலுக்கு வருகிறேன், நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு கொண்டே இருந்த ரஜினிகாந்த் இனி எங்க அரசியலுக்கு வர போகிறார் என அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கையில், நான் கட்சி தொடங்குவது உறுதி, எல்லாம் ரெடி, இன்னும் அம்பு விடுவது மட்டும் தான் என சும்ம கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போன்று சும்மா இருந்த ரசிகர்களை மீண்டும் உசுப்பேத்தி விட்ட ரஜினி.

சுமார் இரண்டு வருடமாக இந்த வந்துட்டேன் வந்துட்டேன் என தண்ணி கட்டிவிட்டு, இறுதியில் எனக்கு உடல் சரியில்லை என காரணம் சொல்லி அரசியலுக்கு வரவில்லை என ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தார் ரஜினி, அனால் உடல் சரியில்லை என சொல்லிவிட்டு வயதான காலத்தில் வீட்டில் ஓய்வு எடுக்காமல், சினிமாவில் தமன்னாவுடன் ஆட்டம் போடும் ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் போன்று இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என ரசிகர்களை ஏமாற்றாமல், அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியலில் இறங்கியுள்ளார் விஜய். விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அவருக்கு அரசியல் தரப்பில் இருந்து முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலை என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் கூட சினிமா துறையில் இருந்து சொல்லும்படி யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம், விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள், அதற்கு வாழ்த்துக்கள் என்றும் மட்டும் சொல்லிவிட்டு அடுத்து எதுவுமே விஜய் அரசியல் குறித்து பேசாமல் கடந்து சென்று விட்டார் ரஜினி. அதாவது விஜய் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று என்று சொல்லிவிட்டால் சர்ச்சையாகி விடும் என்பதால் தான், வேண்டாம் வெறுப்பாக வாழ்த்துக்கள் என ஒரே வார்த்தையில் பேசிவிட்டு கடந்து சென்றுவிட்டார் ரஜினி.

ஆனால் விஜய் அரசியல் என்ட்ரிக்கு ரஜினி உண்மையிலே மனதார பாராட்ட வேண்டும் என்றால் அவருடைய சமூக வலைதளபக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கலாம், அல்லது விஜய் அரசியலுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட்டு இருக்கலாம், இதை எதையுமே செய்யாத ரஜினி போகிற போக்கில் செய்தியாளர் கேள்விக்கு எதாவது பதில் சொல்ல வேண்டுமே என என்பதற்காக வாழ்த்து மட்டும் தெரிவித்து கடந்து சென்ற ரஜினிக்கு நன்றி தெரிவித்து விஜய் செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வேண்டா வெறுப்பாக வாழ்த்து சொன்ன ரஜினிக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளது, அவருடைய உயரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அவருடைய தகுதியை குறைத்து கொள்ளும் செயல் இது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள், மேலும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் அரசியலுக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது உண்மையில்லை என்றும், விஜய் -ரஜினிகாந்த் இடையில் அப்படி எந்த ஒரு தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை என கூறப்படுகிறது.