தமிழுக்கு முக்கிய துவம் இல்லை என்றாலும் பரவாயில்லை…. ரஜினிகாந்த் உண்மை முகம் என்ன என்று தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக சுமார் 40 வருடங்களாக இருந்து வருகிறார். 70 வயதை கடந்தும் இன்னும் இந்த குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது என பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது என ரஜினிகாந்த் நேரடியாக தன்னை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். ரஜினி திரையில் தோன்றினாலே போதும் என செலவு செய்து அவரை காண லச்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் தவமாய் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்த் கர்நாடகாவில் பிறந்த மராட்டியர், ஆனால் இவரை மராட்டியர் என்றோ அல்லது கர்நாடகாவை சேர்ந்தவர் என்றோ அவரது ரசிகர்கள் பார்ப்பதில்லை, அதே போன்று வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரஜினிகாந்தை அவர் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வாழ வைத்துள்ளது. மேலும் தமிழக மக்களுக்கும் , தமிழுக்கும் தான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தும் விதத்தில் தான் நடிக்கும் பாடல் வரிகளில் இடம் பெற செய்வார்.

அந்த வகையில் என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும், தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா என ரஜினிகாந்த் திரையில் பாடி நடித்த போது, சில்லறையை சிதற விட்ட தமிழக ரசிகர்கள் ஏராளம், இந்நிலையில் 2006 முதல் 2011 வரை முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ் சினிமாக்களில் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என சட்டம் கொண்டு வந்தார்.

அந்த வகையில் பலர் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தனர், 2007ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், AVM தயாரிப்பில் உருவான படம் சிவாஜி தி பாஸ், இந்த படம் பெயர் வேறு மொழியில் உள்ளது என்றும், மேலும் இது தமிழ் பெயரே இல்லை என்கிற சர்ச்சை வெடித்து, இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்க கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, இதனால் இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்பொழுது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், சிவாஜி படத்துக்கு வாங்கிய சம்பளம் 18 கோடி, இந்நிலையில் சிவாஜி படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனை சந்தித்து, இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, என்னுடைய சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதம் விட்டு கொடுக்கிறேன், எந்த ஒரு காரணத்துக்காகவும் படத்தின் பெயரை மாற்றி விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மராட்டியாரான ரஜினிகாந்த் மராட்டிய மன்னன் சிவாஜி பெயரை மாற்றி விடாமல் இருப்பதிலும், மேலும் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பரவாயில்லை படத்தில் தி பாஸ் என்கிற ஆங்கில அடைமொழியை மாற்றி விட வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் பல சர்ச்சைகளுக்கு பின் சிவாஜி தி பாஸ் படத்துக்கு வரி விலக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?