படமா இது.?மகளிடம் டென்ஷன் ஆன ரஜினி… லால் சலாம் படம் எப்படி இருக்கு.. இதோ விமர்சனம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம். கிரிக்கெட்டையும் கிரிக்கெட்டில் உள்ள அரசியலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் அப்பா ரஜினிகாந்தை நடிக்க வைத்துள்ளார். சமீபத்தில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, என்னுடைய அப்பா சங்கி இல்லை, அவரை சங்கி என்று சொல்வது வேதனையாக இருக்கிறது என பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் லால் சலாம் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பிரிவியூ ஷோவை பார்த்த ரஜினிகாந்த், படத்தின் பல்வேறு காட்சிகளையும் குறை சொல்லி, கடுமையாக பேசி சில காட்சிகளில் மாற்றம் செய்து நீக்கி விட்டாராம். தான் பெற்ற மகள் என்பதால் கதை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றாலும் நடித்துக் கொடுத்த ரஜினிகாந்த். இருந்தாலும் படம் ஓரளவு நன்றாக வரும் என எதிர்பார்த்து நடித்துள்ளார்.

ஆனால் பிரிவியூ ஷோ பார்த்த பின்பு என்ன படம் எடுத்து வச்சிருக்க என மகள் ஐஸ்வர்யாவை டோஸ் விட்ட ரஜினிகாந்த். படத்தில் பல காட்சிகளை மற்றம் செய்ய சொல்லி வலியுறுத்தியதை தொடர்ந்து லால் சலாம் படத்தில் பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான லால் சலாம் படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.

கிரிக்கெட்டில் மத அரசியல் செய்யும் நபர்களை எதிர்ப்பதே படத்தின் மையக்கரு. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மொய்தீன் பாயாக நடித்துள்ள ரஜினிகாந்தின் பல்வேறு காட்சிகள் மாசாக உள்ளது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் ஆழமான கருத்தை வைத்திருந்தாலும் அதை சொல்ல வந்த விதம் சுமாராக இருப்பது படத்தின் மிக பெரிய மைனஸாக அமைத்துள்ளது.

படத்தை பார்ப்பவர்களுக்கு திரைக்கதை இன்னும் வேகமாக இருந்திருக்கலாம் என்று உணர்வை கொடுக்கிறது. இருப்பினும் படத்தில் நிறைய கூஸ்பம்ப் காட்சிகள் இருப்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடுகின்றனர். அருமையான வசனங்கள், மாஸ் எண்ட்ரி போன்ற சிறப்பு கூறுகள் படத்தை பல இடங்களில் உயர்த்திக் காட்டியுள்ளது.இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பிஜிஎம்மில் மொய்தீன் பாய் வரும் காட்சிகள் கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

படத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாதி ஓரளவு மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி வேற லெவலில் இருந்தாலும், கதாபாத்திரங்களின் தேர்வு, சென்டிமென்ட் ஆகியவை மிஸ் ஆகி இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றமாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது

இரண்டாம் பாதி முழுவதும் ரஜினியின் ஆதிக்கம் தான். அதனால் அவர் கௌரவ தோற்றம் என்று சொல்ல முடியாது. அதிலும் அந்த சண்டை காட்சி ஃபயராக இருக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் கிடையாது அவர் தான் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் அமைத்துள்ளது. அந்த வகையில் கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தை திரையரங்குகளில் கொண்டாடி தீர்க்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.