குஷ்புவை சைட் அடிச்ச ரஜினி… மனதில் இருப்பதை குஷ்புவிடம் அப்படியே போட்டுடைத்த ரஜினி…

0
Follow on Google News

இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது நடையிலிருந்து பேச்சுவரை அத்தனைக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள் பலர். தலைவர் என்று அன்புடன் அழைத்துவருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தற்போது ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஞானவேல் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கதை எழுதும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் 2024 மார்ச் அல்லது ஏப்ரலில் தலைவர் 171 படத்தின் ஷுட்டிங்கை தொடங்குகிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என நம்பிக்கை இருக்கிறது ரஜினியின் ரசிகர்களுக்கு.

மேலும், சமீப காலமாகவே ரஜினிகாந்த் குறித்து ஏதாவது ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது வெளியாகிறது. ரஜினி-குஷ்பூ நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாமலை. தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ.

அதிலும் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் எக்கச்சக்க ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அதிலும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதிலும் இவரும் ரஜினியும் நடித்த அனைத்து படமுமே ஹிட் தான். அந்த வரிசையில் ஒன்று தான் அண்ணாமலை.

இந்த படத்தில் சரத் பாபு, மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், அண்ணாமலை படத்தில் ரஜினி, குஷ்பு இருவருமே வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் குஷ்பூ வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபோது ரஜினி குஷ்புவை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போது குஷ்பூ, ஏன் அப்படியே பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரஜினியோ, ‘உங்களை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் கொடுத்து வெச்சவர். ஏனெனில் இந்த வயதான கெட்டப்பில்கூட ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள்’ என்றாராம். இந்தத் தகவல்தான் வேகமாக பரவிவருகிறது. அதன் பின் குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சுந்தர் சி 2000த்தில் நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இந்த வகையில் இவர்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவ்னி சினிமாக்ஸ் என பெயரிட்டு இருக்கிறார்கள்.

தற்போது குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் தயாரிப்பாளராக, ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதியாக பன்முக திறமையை கொண்டிருக்கிறார். வளரும் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் என்றும் திரை உலகில் நடித்து வரும் எவர்கிரீன் நடிகையாகவும் இருக்கிறார். சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு விரும்பப்படக்கூடிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த குஷ்பூ தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.