பல லட்சம் செலவில் மக்களுக்காக ரஜினி என்ன செய்துள்ளார் தெரியுமா.? சத்தமே இல்லாமல் நடத்த செயல்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தீவிர ஆன்மீகவாதி, மேலும் அவர் ராகவேந்திரா பக்தர், அந்த வகையில் தன்னுடைய 100வது படத்தில் அவருடைய குருநாதர் ராகவேந்திராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார்.ரஜினிகாந்த் தீவிர சிவன் பக்தரும் கூட. அந்த வகையில் அவருடைய படங்களில் அருணாச்சலம் அண்ணாமலை போன்ற சிவன் குறித்த பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.

திருவண்ணாமலை கோவிலில் சுற்றி கிரிவல பாதையில் இருள் சூழ்ந்து அங்கே தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயம் ரஜினியின் கவனத்திற்கு சென்றதுமே, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மழை சுற்றிவர சுமார் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைக்கு தனது சொந்த செலவில் பல லட்ச ரூபாய் செலவில் 148 மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் இதேபோன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி வரும் பக்தர்களுக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்பே தண்ணீர் வசதியும் செய்து கொடுத்தவர் ரஜினிகாந்த். இது போன்ற அடிப்படை வசதிகளை ரஜினிகாந்த் செய்து கொடுத்த பின்பு இரவு நேரங்களிலும் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

மேலும் எந்த ஒரு அச்சமின்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வழிவகை செய்தது. அதேபோன்று அண்ணாமலை கோவிலில் கோபுரத்தின் முன்பு சக்தி வாய்ந்த போக்கஸ் லைட்டுக்களும் ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த செலவில் செய்து முடித்துள்ளார். இது போன்று பல லட்சம் செலவில் திருவண்ணாமலை கோவிலுக்கு ரஜினிகாந்த் சத்தமே இல்லாமல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.