தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிக கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தனுசுக்கு டோக்கியாக செல்ல வேண்டும் என்கின்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவருக்கு பெண்ணும் கிடைத்தது,
இரண்டும் ஒரே நேரத்தில் அமைத்ததால் ஜப்பானில் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் நடந்து முடிந்தது. மேலும் தசைவளக் குறைபாட்டு நோயால் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நெபோலியன் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் அனிமேஷன் படித்து முடித்துள்ளார் என்றும் கூற படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அக்ஷய என்கிற பெண்ணுக்கும் தனுசுக்கும் ஜப்பானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒரு சிலர் எல்லை மீறி இந்த திருமணத்தை விமர்சனம் செய்து வந்தனர்.

அப்படி எல்லை மீறி விமர்சனம் செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மயோபதி மருத்துவமனை டாக்டர் டேனியல் என்பவர் பேட்டி ஒன்றில் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து பேசுகையில். தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்து மண வாழ்கையில் ஈடுபட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் தனுஷை அதிகளவில் பாதிப்பு அடைய செய்யும் வார்த்தைகளாகத்தான் இருக்கிறது.
தனுஷ் மட்டுமல்லாமல் இதுபோல தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வருத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாராலும் திருமணம் செய்ய முடியாது என்று ஒட்டுமொத்தமாக கூற முடியாது. நோயின் தாக்கத்தினை பொறுத்து தான் அவர்களால் திருமணம் செய்ய முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும். இந்த நோய் பாதிப்பு அடைந்த பலர் 60 வரை வயது வரைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
சிலர் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என மருத்துவர் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில் போற்றுபவர் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என , வாழ்த்துக்களை மட்டும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.
குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுலாவும் செய்துவருகிறார்கள் புதுமண தம்பதியினரான தனுஷ் – அக்சயா இருவரும், அந்தவகையில் அவர்கள் இப்போது மலேசியாவில் இருந்து வரும் நிலையில் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் திருமணம் முடிந்து நூறு நாட்கள் ஆகிவிட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி தனுஷுக்கு அக்ஷயா காதலோடு கேக்கும் ஊட்டிவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அந்த வகையில் இப்ப தான் திருமணம் முடிந்த மாதிரி இருந்தது அதற்குள் மகனின் 100 வது நாள் திருமணம் கொண்டாட்டம் என்கிற மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்துடன் நெபோலியன் கொண்டாடி உள்ளார்.