நடிகர் லிவிங்ஸ்டண், சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தின் வெளியான லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், மேற்படி சிகிச்சைக்கு பணம் என்று தவித்த போது ரஜினிகாந்த் உடனடியாக உதவியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு முன்னணி நடிகராக உயர்ந்துவிட்டால், கோடிகளில் சம்பளத்தை அல்லலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த வயதிலும் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஏராளமான சினிமா பிரபலங்கள் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வழங்கி வருகின்றனர்.
அப்படி உதவி என நாடி வருபவர்களுக்கு உடனடியாக உதவும் கரங்களின் வரிசையில் ரஜினியும் ஒருத்தர். பொதுவாக ரஜினி செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை. அவர் இது போன்ற பப்ளிசிட்டியை விரும்புவதும் இல்லை. இருப்பினும் அவ்வப்போது ரஜினி வழங்கிய உதவிகள் பற்றி செய்திகள் வெளியாவதை பார்த்திருப்போம். அந்த வகையில், பிரபல நடிகர் லிவிங்ஸ்டாண் ரஜினியின் உதவும் மனப்பான்மை பற்றியும், அண்மையில் ரஜினி அவருக்கு செய்த உதவி பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார்.
அன்று ஒரு நாள் திடீரென லிவிங்ஸ்டனின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு நிறைய செலவாகும் என்று கூறி இருக்கின்றனர். ஓரளவு பணத்தை செலுத்திய லிவிங்ஸ்டன் மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தாராம். அந்த சமயத்தில்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வந்துள்ளார்.
ஒரு நாள் ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்களிடம் மனைவியின் சிகிச்சை பற்றி பேசி புலம்பி இருக்கிறார் லிவிங்ஸ்டண். இந்த செய்தி ரஜினிகாந்த் காதுக்கு செல்லவே, லிவிங்ஸ்டனை அழைத்து 15 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து மனைவிக்கு சிகிச்சை பாருங்க என்று கூறி ஆறுதல் படுத்தினாராம்.
அப்போது பணத்தை வாங்காமல் தயங்கி நின்ற லிவிங்ஸ்டனை பார்த்து, நான் உன் அண்ணன் மாதிரிடா, நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்ட ரஜினி, இது பத்தவில்லை என்றால் மேலும் வாங்கிக் கொள்ளுமாறும் கூறினாராம்.
அன்று ரஜினி முன்வந்து நிதி உதவி செய்ததால் தான் இன்று தன்னுடைய மனைவி உயிருடன் இருக்கிறாள் என்று லிவிங் ஸ்டண்ட் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். மேலும் பணத்தை வாங்கிக் கொண்டு ரஜினியின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்தவர்கள் ரஜினி இதுபோல நிறைய உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.