விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் லெஜெண்ட் சரவணன்… என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவினர் அனைவரும் தனி விமான மூலம் காஷ்மீர் சென்றவர்கள். அங்கே தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அதில் மிஸ்கின் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் காஷ்மீரில் படமாக்கப்பட்டு அவர் சென்னைக்கு திரும்பி அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடிகர் அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதன் பின்பு ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்படுகிறது. காஷ்மீரில் அதிக குளிர் காரணமாக தங்களுடைய காட்சிகள் படமாக்கப்பட்ட உடனேயே அங்கிருந்து புறப்பட்டு சென்னை திரும்பி வருகின்றனர் நடிகர்கள்.

அந்த வகையில் நடிகை திரிஷா காஷ்மீர் சென்ற மிக குறுகிய காலத்திலேயே குளிர் தாங்க முடியாமல் சென்னை திரும்பியவர். அடுத்து என்னுடைய காட்சி படமாக்கும் பொழுது தகவல் சொல்லுங்கள் வருகிறேன் என்று வந்துவிட்டார். அந்த அளவுக்கு காஷ்மீரில் குளிர் வாட்டி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மிக ரகசியமாக வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அந்த வகையில் தான் அந்தந்த நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட உடனே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதனால் விஜய் தவிர வேறு யாருக்குமே அந்த படத்தின் முழு கதை தெரியாது என்று கூறப்படுகிறது. அதே போன்று லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரின் பெயர் வெளியே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடாமல் ரகசியமாக வைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீர் சென்ற லெஜெண்ட் சரவணன் அங்கே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு விரைவில் அப்டேட் என்கின்ற ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால், மேலும் அந்த படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்க இருப்பதால் அதில் லேஜன் சரவணன் ஒரு வில்லனாக நடிக்கிறார் என்கின்ற ஒரு செய்தி காற்று தீ போல் வைரலாகி வந்தது.

இது குறித்து காஷ்மீர் வட்டாரத்தில் நாம் விசாரித்ததில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது, மேலும் காஷ்மீரில் தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்கான லொகேஷன் தேர்வு செய்வதற்காக காஷ்மீர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய புதிய படத்தின் அப்டேட் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்பதை தான் லெஜென் சரவணன் தெரிவித்ததாகவும்.

ஆனால் லியோ படத்தில் லெஜென் சரவணன் நடிக்கும் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று ஒரு வதந்தியை பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் லியோ படத்தில் லெஜன்ட் சரவணன் நடிப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை இது முற்றிலும் தவறான செய்தி என நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.