குறுகிய பட்ஜெட் பெரும் லாபம்… அமெரிக்காவில் ஒரே ஜாலி தான்.. கமல்ஹாசன் வாழ்க்கையில் திடீர் திருப்பம்..

0
Follow on Google News

கடந்த 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியை சந்தித்த நிலையில் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் அவருடைய நடிப்பில் வெளியான படம் விக்ரம். இந்த படம் கமல்ஹாசனுக்கு எதிர்பாராத பெரும் லாபத்தை பெற்று தந்தது.

இதற்கு முன்பு கமல்ஹாசன் வாங்கிய கடனையும் அடைத்து விட்டு மேலும் கிடைத்த லாபத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரிக்கும் அளவிற்கு பெரும் லாபத்தை பெற்று தந்தது விக்ரம் திரைப்படம். மேலும் நடிகர்கள் கமலஹாசனின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து அவருடைய சம்பளமும் மிக குறைந்த அளவே வாங்கிக் கொண்டிருந்த நிலையில், விக்ரம் படத்திற்கு பின்பு தற்பொழுது நடிகர் கமலஹாசனின் சம்பளம் 100 கோடியை தாண்டி உள்ளது.

மேலும் தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் அதிக படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் அடுத்து என்ன படம் நடிக்க இருக்கிறார் என்று பெரும் குழப்பம் நீடித்து வந்த நிலையில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கும் கமல்ஹாசன் அந்த படத்தில் நடிப்பார் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருந்த கமல்ஹாசன் அந்த படத்திற்கு அட்வான்ஸ் தொகையும் ஏற்கனவே கொடுத்திருந்த கமல்ஹாசன், மேலும் ஒரு பிஎம்டபிள்யூ காரும் ஹெச் .வினோத்துக்கு பரிசளித்து இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் வருவார் காத்திருந்த ஹெச்.வினோத் ஒருவேளை கமலஹாசன் தன் படத்தில் நடிக்காமல் மணிரத்தினம் படத்தில் நடிக்க சென்று விட்டால்.

தனுஷ் உடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருந்த வினோத் அந்த படத்தை தொடங்கலாம் என்ற முடிவில் இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே விக்ரம் மற்றும் இந்தியன் ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து மனித ரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கும் பிரம்மாண்டமான படத்திற்கு முன்பு ஒரு சிறிய பட்ஜெட்டில் நடிக்க முடிவு செய்து ஹெச்.வினோத் இயக்கத்தில் கமிட்டான படத்திற்கு 35 நாட்கள் கால் சீட் கொடுக்க முன்வந்துள்ள கமலஹாசன்.

இந்தப் படம் மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுப்பதற்கான முடிவு செய்து இருகிறார்கள், மேலும் கமல்ஹாசனின் மார்க்கெட் தற்பொழுது மிகப்பெரிய உச்சத்தில் இருப்பதால் மேலும் தொடர்ந்து விக்ரம் இந்தியன் 2 ஆகிய இரண்டு பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ஒரு புதிய படம் வருவதால் அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால் சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய லாபத்தை ஹெச் வினோத் இயக்கும் புதிய படம் சம்பாதித்து தரும் என்கின்ற நம்பிக்கை கமல்ஹாசன் எனக்கு உண்டு.

அந்த வகையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்திற்கு கமல்ஹாசன் 35 நாட்கள் கால் சீட் கொடுத்த பின்பு அடுத்த ஒரு மாதத்திற்கு அமெரிக்காவில் ஓய்வு எடுக்க செல்கிறார். அதன்பின்பு தான் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க கால் சீட்டை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமலஹாசனின் தற்போது வாழ்க்கை மிக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கிய திடீர் திருப்பமாக அமைந்தது அவருடைய தயாரித்து நடிப்பில் வெளியான விக்ரம் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.