நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் உடல்நிலை சற்றும் மோசமாக இருக்கிறது, அதனால் சினிமாவில் நடிக்கும் நீங்கள் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது, உங்களுடைய உடலை மென்மையாக பாதுகாக்க வேண்டும். உங்களுடைய உடலுக்கு ஒத்துழைப்பு தருவது போன்ற ஒரு சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் மட்டுமே நீங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக தற்பொழுது உங்களுக்கு ஓய்வு முக்கியம் என மருத்துவர்கள் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய உடல் நிலைக்கு ஏற்றார் போன்று படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். மேலும் இடை இடையே ரஜினிகாந்துக்கு அதிகம் ஓய்வு தேவை பட இருப்பதால், இடை இடையே கேப் விட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டு செல்கிறது, ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பின் போது கொரோனா தொற்று பரவல் மற்றும் ரஜினிகாந்த் உடல் நிலை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது, மேலும் படம் குறிப்பிட்ட தேதிக்குள் ரிலீஸ் செய்ய முடியாத காரணத்தினால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்து ரஜினி நடிக்க இருக்கும் படம் தான் அவருடைய கடைசி படம் என கூறப்படுகிறது. உடல் நிலை குறித்து மருத்துவர் கொடுத்த அட்வைசை ஏற்று சினிமாவில் இருந்து விலகி முழு நேரம் ஓய்வு எடுக்க செல்ல இருக்கும் ரஜினிகாந்த், அவருடைய கடைசி படம் மிக பெரிய சாதனை படமாக அமைய வேண்டும் என விரும்புகிறார், அந்த வகையில் ஏற்கனவே பல இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்த ரஜினிகாந்த்.
அவர்களையெல்லாம் நிராகரித்து விட்டு, தற்பொழுது மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் படத்தில் நடிக்கும் திட்டத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது அவர் இயக்கம் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பில் காஷ்மீரில் உள்ளார். ஆனால் லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் செல்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து லியோ படத்தை முடித்த பின்பு, நம்ம இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டுள்ளார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் ஒரு படம் கமிட்டாகி உள்ளேன், லியோ முடித்துவிட்டு அந்த படத்தை தான் தொடங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் பரவாயில்லை, நான் கமல்ஹாசனிடம் பேசிக் கொள்கிறேன்.நான் உங்களுடன் இணைந்து பண்ண போகும் படம் தான் நான் சினிமாவில் நடிக்க இருக்கும் கடைசி படம் என மிக உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்,
என்னுடைய கடைசி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதால் உங்களை அழைத்து பேசுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்கு லோகேஷ் கனராஜ், கமல் சாரிடம் நீங்கள் பேசி கன்வின்ஸ் செய்து விட்டால், எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, உடனே லியோ படம் முடித்துவிட்டு அடுத்து நம்ம படத்தை தொடங்கலாம் என்று லோகேஷ் கனராஜ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய கடைசி படம் குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது, அப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கட்டும் என கமல்ஹாசன் தெரிவிக்க அதற்கு ரஜினிகாந்தும் ஓகே சொல்லிவிட்டாராம், இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதில் மூலம் ரஜினிகாந்த் கடைசி படத்தில் கமல்ஹாசனும் பங்கேற்க்க உள்ளது குறிப்பிட்டத்தக்கது.