கலாபமணி உயிரை பறித்த பீர்….பீரில் கலந்திருக்கும் வேதி பொருள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கலாபவன் மணி தன்னுடைய கரியரை மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக ஆரம்பித்தவர். கொச்சின் கலாபவன் என்ற நாடக குழுவில் தன்னுடைய தனித்துவமான திறமையை தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்த அவருக்கு அக்‌ஷரம் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலக கதவு திறந்தது. அந்தப் படத்தில் ரிக்‌ஷா டிரைவராக நடித்தார் கலாபவன் மணி.

சில படங்களில் தமிழில் அவர் நடித்திருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்களிடையே பலமாக நிலை நிறுத்தியது என்றால் அது சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி படம்தான். விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் கலாபவன் மணி தேஜா என்ற வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று தன்னுடைய மிமிக்ரி, உடல்மொழி என அத்தனை வித்தையையும் காட்டி கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போய்விட்டார். ஜெமினியை தொடர்ந்து தமிழில் தென்னவன், நாம், ஜே ஜே, வேல், ஏய், பந்தா பரமசிவம், எந்திரன்,பாபநாசம் என பல படங்களில் நடித்தார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர், சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர்.

இதனால் கலாபவன் மணியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ அளித்த அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று தெரிவித்து 35 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் உண்மையிலேயே கலாபவன் மணி அவர்கள் கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என்று தெளிவாக பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.

இந்த நிலையில் கேரளா ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மரணம் குறித்து கூறியது, கலாபவன் மணிக்கு பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்தது. மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருள்.

ஒரு நாளைக்கு 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததால் தான் கலாபவன் மணிக்கு மரணம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கலாபவன் இறந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்து இருந்தார். அதில் மெத்தில் ஆல்கஹாலும் இருந்தது. பொதுவாகவே பீரில் மெத்தில் ஆல்கஹால் குறைவாக தான் இருக்கும், இவர் தொடர்ந்து பீர் குடித்ததால் மெத்தில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து இருக்கிறது. இது அவருடைய உடலில் அதிகளவு சேர்ந்தது. ஏற்கனவே இவருக்கு நீரிழிவு நோயாளி இருந்தது. இதற்காக இவர் இரண்டு வேளையும் மாத்திரை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

இந்த மாத்திரைகள் சாப்பிடும்போது கலாபவன் மணி பீர் குடித்ததால் உடலில் வேதி வினைகள் ஏற்பட்டு கடுமையாக பாதித்திருக்கிறது. நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்திருக்கிறார். கல்லீரல் பாதிக்கப்பட்டும் இவர் அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. ஒரு கட்டத்தில் கல்லீரல் சுத்தமாக செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால்தான் இவர் இறந்தார் என்று கூறியிருக்கிறார்.