நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் கடந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த தமிழ் படம் என்கின்ற மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ளது. இந்த படத்தின் நூறாவது வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பலரும், குறிப்பாக சாய் பல்லவியை தான் பாராட்டி பேசி இருந்தார்கள்.
மேலும் சாய் பல்லவி டாப் நடிகையாக இருந்தாலும் பிற மொழி படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார், பெரும்பாலும் தமிழ் படங்களில் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் சாய் பல்லவி. இதற்கு காரணம் தமிழ் சினிமா துறையில் அவருக்கு நடந்த கசப்பான சில சம்பவங்கள் தான் என்று கூறப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் சாய் பல்லவிக்கு நடந்த கசப்பான சம்பவம் என்ன என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் தனுசுடன் நடந்த ஒரு கசப்பான சம்பவம் தான் தமிழ் சினிமாவை வெறுத்து சாய் பல்லவி பிற மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் தனுசுடன் மாரி 2 படத்தில் சாய் பல்லவி நடித்தார், அப்போது அந்த படத்தில் சாய் பல்லவி காமிடவதற்கு முன்பு கதாநாயகிக்கும் முக்கிய துவம் இருக்கும் வகையில் படத்தின் கதையை சாய் பல்லவியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சாய் பல்லவியும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார், ஆனால் படத்தில் தனுஷை விட சாய் பல்லவி சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படம் வெளியான சாய் பல்லவிக்கு மிக பெரிய அளவில் தனுஷை விட பாராட்டும் கிடைக்கும் என்பதால், மாரி 2 படத்தில் சாய் பல்லவி நடித்த பல காட்சிகளை தனுஷ் வெட்டி எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று சூர்யா நடிப்பில் என் ஜி கே என்கின்ற படத்தின் நடித்த போதும் சாய் பல்லவி நடித்த பல காட்சிகளை சூர்யா இயக்குனரிடம் சொல்லி வெட்டி எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது சாய் பல்லவி எப்போதும் கதைக்கு முக்கிய துவம் இருக்கும் படத்திலே கமிட்டாவர். ஆனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாய் பல்லவி ஏமாற்றப்பட்டு வந்ததால் ஒரு கட்டத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் தான் முழு திறமையை காட்டி நடித்தாலும் கூட, தன்னுடைய காட்சிகள் இடம் பெற்றால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை விட தான் பெயர் பெற்று விடுவோம் என்பதற்காக வெட்டி எடுக்கப்படுவதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதை புறக்கணித்து வந்தார் சாய் பல்லவி. இந்த நிலையில் அமரன் படத்தில் கமிட்டான சாய்பல்லவி, அந்த படத்தின் முழுவதும் நடித்து முடித்த பின்பு தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் என்னுடைய காட்சிகள் வெட்டி எடுத்துட்டீங்களா.? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்துள்ளார்.
ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று நம்பிக்கையை கொடுத்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் சாய்பல்லவிக்கு படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும் வழக்கம்போல் தமிழ் சினிமாவில் தன்னுடைய காட்சிகள் வெற்றியெடுப்பது போன்று அமரன் படத்திலும் வெட்டி எடுக்கப்படுமா என்ற ஒரு வித சந்தேகத்துடனே அமரன் படம் ரிலீஸ் ஆகும் வரை காத்திருந்தார் சாய்பல்லவி.
ஆனால் தான் நடித்த அனைத்து காட்சிகளும் அமரன் படத்தில் இடம்பெற்று இருந்தது சாய் பல்லவிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அமரன் பட வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து அனைத்து காட்சிகளுமே இந்த படத்தில் இடம்பெறும் வகையில் என்று ஒப்புதல் அளிக்கக்கூடிய கதாநாயகர்களும் இங்கே இருக்கிறார்கள் என்று பேசி மறைமுகமாக தனுஷை தாக்கி இருந்தார்.