அஜித் ரீல் மகளுடன் ஜோடி சேரும் தனுஷ்… ரொமான்ஸ் கதையாம்..

0
Follow on Google News

நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் அடுத்ததாக நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிகா 2004 இல் பிறந்தார். இவர் தனது மூன்று வயதில் இருந்தேன் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

மேலும், 2015 இல் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து, நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 18 வயதே ஆன நடிகை அனிகா சுரேந்திரன், அண்மையில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

குறிப்பாக, ஓ மை டார்லிங் படத்தில் ஹீரோவுடன் முத்த காட்சிகளில் நடித்ததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். சிறுவயதிலேயே நெருக்கமான காட்சிகளில் நடித்ததால், படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஹீரோயினாக அறிமுகமான ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அனிகா, அடுத்ததாக தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ், தற்போது அவரது ஐம்பதாவது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், தூஷரா விஜயன், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவராஜ்குமார், நாசர், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் , தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு பக்கம் டைரக்ஷன் என்ன பிசியாக இருக்கும் தனுஷ் , அடுத்ததாக இயக்க உள்ள படத்தில்தான் அனிகா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும், தனுஷ் படம் என்றாலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது, அனிகாவை வைத்து எப்படி படம் எடுக்க போகிறாரோ என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில் தனுஷ்- அனிகா கூட்டணி தமிழ் சினிமாவில் ஹிட் அடிக்குமா அல்லது தோல்வியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.