நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்தையும் திரை வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுத்து அதை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்திருந்தார். நயன்தாரா பியாண்டு தி ஃபேரிடேல் என்கிற பெயரில் இந்த ஆவணப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த ஆவண படம் சுமார் 18 கோடிக்கு நயன்தாரா நெட் பிலிக்ஸ்க்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது, முதலில் நயன்தாரா திருமண வீடியோவை தான் நெட் பிலிக்ஸ்க்கு விற்பனை செய்தார் நயன்தாரா.
ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு எதிர்பார்த்தது போன்று அஜித் விஜய் விக்ரம் சூர்யா என பல முன்னனி நடிகர் மட்டுமில்லை, திரிஷா, சமந்தா என முன்னனி நடிகரும் வரவில்லை இதனை தொடர்ந்து நெட்டபிலிக்ஸ் இந்த திருமணம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என தட்டி கழிக்க, சரி திருமண வீடியோவுடன் சேர்த்து எங்கள் திரையுலக வாழ்க்கையையும் சேர்த்து ஆவணப்படமாக தருகிறோம் என்று நயன்தாரா தெரிவிக்க நெட் பிலிக்ஸ் சம்மதம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளிவரும் முன்னர் அதன் டிரைலர் வெளியானபோது அதில் நானும் ரெளடி தான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி அதை நீக்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து நயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதாவது நயன்தாரா அவர் நடித்த அணைத்து சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அனுமதி வாங்கிய நிலையில், தனுஷிடம் மட்டும் வாங்க வில்லை.
இதனை தொடர்ந்து தங்களிடம் உரிய அனுமதி வாங்காமல் அந்த வீடியோ காட்சியை பயன்படுத்தி இருப்பதால் தனுஷ் நோட்டீஸ் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த நயன்தாரா, நடிகர் தனுஷை தாக்கி மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டார். நயன்தாரா இப்படி பக்கம் பக்கமா அறிக்கை வெளியிட்ட பின்பு தான் நயன்தாரா ஆவணப்படம் வெளியாக இருப்பதே மக்களுக்கு தெரியவந்தது.
அந்த வகையில் ஆவணப்படத்தை புரமோட் செய்வதற்காக நயன்தாரா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக விமர்சனமும் எழுந்தது. மேலும் தனுஷின் நோட்டீஸ் அனுப்பி வார்னிங்கிற்கு பின் வெளியான ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் 30 விநாடிகளுக்கு மேல் இடம்பெற்று இருந்தன. இதனை தொடர்ந்து தனுஷ் இனி இதை கண்டுக்க மாட்டார், நயன்தாராவை பாவம் பார்த்து விட்டு விடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் நயன்தாரா – தனுஷ் இருவரும் கலந்து கொண்ட நிலையில் ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை, ஆனால் நயன்தாரா இருக்கை தனுஷ் அமர்ந்த இடத்தில் இருந்து தள்ளி இருந்தது இருந்தாலும், வேண்டுமென்றே தனுஷ் இருக்கை பக்கத்தில் மறந்து தனுஷை நோக்கி காலை தூக்கி கால் மேல் கால் போட்டு தெனாவட்டு காட்டினார் நயன்தாரா.
இதனை தொடர்ந்து தன்னை நோக்கி காலை தூக்கி கால் மேல் கால் போட்டு அவமானப்படுத்திய நயன்தாராவை இனியும் சும்மா விட கூடாது,என தரமான சம்பவம் செய்துள்ளார் தனுஷ், இந்தநிலையில் தான் தற்போது நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கதறி வருவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.