பெண்கள் ரூமுக்கு அழைப்பு… பிரச்சனையில் சிக்கிய தனுஷ்…

0
Follow on Google News

சினிமா வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது மிக பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார், ஏற்கனவே தனுஷ் குறித்து சினிமா துறையில் பல்வேறு தகவல்கள் பரவி கிடக்கிறது, இதில் தற்பொழுது இந்த பிரச்சனை வேற யா.? என்று சொல்லும் வகையில், அமைத்துள்ளது தற்பொழுது தனுஷ் சிக்கியுள்ள இந்த பிரச்சனை.

அதாவது சினிமா வாய்ப்பு தேடும் பெண்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்களை குறிவைத்து அவர்களை தொடர்பு கொண்டு, நான் தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசுகிறேன், சினிமாவில் நாங்க எடுக்கும் புதிய படங்களுக்கு நடிகைகள் தேடி வருகிறோம், உங்களுக்கு விருப்பம் இருக்கா என்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஒரு கட்டத்தில் ஓகே எனக்கு நடிக்க வாய்ப்பு தாருங்கள் என்று சொன்னதும், சரி இத்தனை மணிக்கு இந்த ஓட்டலுக்கு இந்த ரூமுக்கு வாங்க என்று சொன்னதும் தான் இது வேற மாதிரி போகுதே என்று பல பெண்கள் பின் வாங்கி உள்ளனர். இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் தனுஷ் மேனேஜர் பெயர் ஸ்ரேயாஸ் அவருடைய பெயரில் ஒருவர் அதிகமான பெண்களுக்கு சாட் செய்து வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நீக் என்கின்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்யப் போகிறோம், இந்த படத்தின் அடுத்ததாக பார்ட் 2 எடுக்க இருப்பதாக நிறைய பெண்களை தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், எப்படி நீக் என்கின்ற படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பெற்றதோ, அதேபோன்று இந்த படத்திற்கும் நிறைய கதாபாத்திரத்துக்கான நடிகைகளை தேர்வு செய்து வருகிறோம் என்று தனுஷ் மேனேஜர் ரியாஸ் பெயர் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வாய்ப்பு தேடும் பல சினிமா துறையைச் சார்ந்த பெண்கள், ஓகே சார் நாங்கள் நடிக்க ஆர்வமாக இருக்கின்றோம் என்று சொன்னதும், உடனே தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேரில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேசும் அந்த நபர், ஓகே இத்தனாம் தேதி , இத்தனை மணிக்கு, இந்த ஓட்டலில் சந்திக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அந்த நபரின் அணுகுமுறை மீது சந்தேகப்பட்ட பல பெண்கள், நேரடியாக தனுஷின் மேனேஜர் ஸ்ரேயா கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள், ஆனால் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ், இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, மேலும் உங்களை தொடர்பு கொண்டு பேசியது சாட் செய்தது எதுவுமே என்னுடைய தொலைபேசி எண் இல்லை என்று தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஷாக் ஆன பல பெண்கள் நல்லவேளை தலைக்கு வந்தது தலைப்பா வுடன் போனது, ஏமாறாமல் தப்பித்துக் கொண்டோம் என்று பெருமூச்சு விட்டுள்ளனர், இந்த நிலையில் தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாசை பெரும்பாலும் சினிமா துறையில் இருப்பவர்கள் கூட அவருடைய முகத்தை பார்த்தது கிடையாது.

அப்படி இருக்கையில் புதிதாக சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள் யாரோ ஒருவர் பேசுவதை நம்பி இவர்தான் தனுஷின் உண்மையான மேனேஜர் போன்று நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, தனுஷ் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதாவது தங்களுடைய மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் இது போன்ற மோசடிகள் நடைபெறுகிறது. அதனால் யாரும் நம்ப வேண்டாம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here