பெண்ணிடம் அத்து மீறிய கூல் சுரேஷ்… இது முதல் முறை அல்ல…பாதிக்கப்பட்ட பெண் சொன்ன பகீர் தகவல்..

0
Follow on Google News

90-களில் அதிரடி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். அவர் தற்போது நடித்துள்ள படம் ’சரக்கு’. இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். இதற்கிடையே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது நடிகர் கூல் சுரேஷும் மேடை ஏறினார். அங்கு அவருக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, ”எல்லோருக்கும் மாலை போடுகிறோமே, நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா?” என்று கேட்டுவிட்டு, அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ஐஸ்வர்யாக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார் கூல் சுரேஷ். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த தொகுப்பாளினி கடுமையாக கோபமடைந்தார். உடனடியாக அந்த பெண் மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஆடியோ விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவர் விருப்பமின்றி கூல் சுரேஷ் மாலை அணிவித்த சம்பவம், கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அதில், “என்னால் நடித்து பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன். நான் பண்றது எல்லாமே ஜாலிக்குத்தான்.

அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இப்படி மாலை போட்டதும். ஆனா ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்திட்டேன் என நினைக்கிறப்ப உண்மையாவே வருத்தமா இருக்கு.. நான் பண்ணது பெரிய தப்புதான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டேன்” என மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தொகுப்பாளினி ஐஸ்வர்யா, ”அதை நினைச்சா இன்னும் ஷாக்கிங்கா இருக்கு. அதுவும் என் ஷோல்டர்ல பலவந்தமா அழுத்தி, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல மோசமா நடந்துக்கிட்டார். ஒருத்தர் பொதுமேடையில திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? நான் ஏன் பளார்னு கூல் சுரேஷ் கன்னத்துல ஒரு அறை கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்.” என்று பேசியுள்ளார்.

மேலும், “கிறுக்குத்தனம் பண்ணுவதில் கூட ஒரு லிமிட் இருக்கு. அது யாரையும் காயப்படுத்தாத மாதிரி இருக்கணும். கூல் சுரேஷ் இதற்கு முன்னாடியும் ஒரு நிகழ்ச்சியில எங்கிட்ட வம்பு பண்ணியிருக்கார். எனக்கு பொதுவாகவே அவரோட நடவடிக்கைகள் பிடிக்காது. மேடையில் கூப்பிடும்போது தன்னை வெறுமென கூல் சுரேஷ் என சொல்லாமல், ‘யூ டியூப் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் இருக்கு, அதை சொல்லி கூப்பிட மாட்டிங்களா? என கேட்பார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மாலையை என் கழுத்துல வேண்டும் என்றே போட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இன்னொரு முறை இந்த மாதிரி நடந்தா கண்டிப்பா கன்னத்துல ஒரு அடியாவது கொடுப்பேன். இல்லை என்றால் போலீஸில் புகார் கொடுப்பேன்” என அவர் கூறியுள்ளார்.