விஜய்யை நம்பி சென்ற சந்தனுவை இப்படி ஏமாற்றலாமா.? கண்கலங்க வைத்த சாந்தனு சொன்ன தகவல்..

0
Follow on Google News

இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல முகம் கொண்ட இயக்குனர் பாக்யராஜ், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்தவர், அவருடைய மகன் நடிகர் சந்தனு, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்கள் நடித்து இருந்தாலும் கூட அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தொடர்ந்து போராடி வருகிறார்.

அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் விஜய் உடன் இணைந்து ஒரு படம் நடித்தால், அவர் மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கமிட்டானார் சந்தனு, ஆனால் மாஸ்டர் படத்தினால் தனக்கு ஏற்பட்ட சில சம்பவங்களை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், மாஸ்டர் படத்தில் எனக்கான கதாபாத்திரம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கதையில் இருந்தது..

மேலும் நடிகர் விஜயுடன் நடிக்கும் படத்தில் முக்கியத்துவமான வாய்ந்த கதாபாத்திரத்தில் எனக்கு வரும் போது,யாராவது மறுப்பார்களா.? மேலும் எனக்கு நடிகர் விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். அப்படி இருக்கையில் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்.  உடனே மாஸ்டர் படத்தில் கமிட்டானேன். ஆனால் நான் நடித்த என்னுடைய காட்சியே வரவில்லை என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால். அந்த படம் வெளியாவதற்கு முன்பு பல யூ டியூப் சேனல்களில் நான் எதற்கு பேட்டி கொடுக்க போகிறேன்.

ஆனால் மாஸ்டர் படம் வெளியான பின்பு என்னடா, இவன் யூட்யூப்ல இன்டர்வியூ கொடுத்த அளவுக்கு கூட அவன் காட்சி அந்தப் படத்தில் இடம்பெறவில்லை என்று என்னை பலரும் கலாய்த்தனர். மாஸ்டர் விஜய் நடிக்கும் மிகப்பெரிய திரைப்படம், அப்படி ஒரு திரைப்படத்தில் நாம் இடம் பெறும் பொழுது இன்றைய தலைமுறையினரிடம் எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தேன், ஆனால்  நடந்தது வேறு. 

மாஸ்டர் படத்தில் நான் நடிப்பதற்கு நான் தேர்வு செய்தது சரிதான், ஆனால் என்னுடைய நேரமா என்று தெரியவில்லை. இயக்குனர் லோகேஷ் கூட என்னிடம் சொல்லியுள்ளார் சாந்தனு கதாபாத்திரம் நான் நினைத்து எழுதினது மாதிரி அந்த படத்தில் இடம்பெறவில்லை என்று அவரே தெரிவித்திருக்கிறார். அதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நான் குறை சொல்ல முடியாது.

ஏனென்றால் வேண்டுமென்றே என்னை அவரே அழைத்து இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்து, என்னை அடிமட்டத்திற்கு தள்ளிவிட வேண்டும் என்று நிச்சயம் அவர் செய்ய நினைக்க மாட்டார்.  இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் மகன் இன்னும் சினிமாவில் போராடிக் கொண்டு இருக்கிறார் என்கின்ற ஒரு நல்ல எண்ணத்தில் வாய்ப்பு கொடுத்து அவருக்கு கை கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கில் தான் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

மாஸ்டர் படத்தில் நான் மட்டுமே சுமார் 30 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது. 12 நிமிடம் மட்டுமே என்னுடைய காட்சி வருவதற்கு நான் எதற்காக 30 நாட்கள் படபிடிப்பு கலந்து கொள்ள வேண்டும். எனக்கென ஒரு தனி யூனிட் கொடுத்து, எனக்காக தனியாக சண்டை காட்சிகள் இடம் பெற்று இருந்தது, ஒரு தனி பாடல் கட்சியும் கூட இருந்தது.

ஒரு அரை நாள் எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் இடையில் ஒரு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த சண்டைக் காட்சிகள் என்னை சுற்றி வளைக்கிறார்கள்,  அப்போது விஜய் அண்ணா என்னை காப்பாற்ற வருகிறார் அதில் நானும் விஜய் அண்ணாவும் இணைந்து எதிரிகளிடம் சண்டையிடுவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. மாஸ்டர் படத்தில்  என்னுடைய காட்சிகள் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டது ஆனால் அந்த பட வெளியாகும் போது அதெல்லாம் இடம்பெறவில்லை என கண்கலங்குவது போன்று சந்தனு உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் இந்த பேட்டியை பார்த்தவர்கள், மாஸ்டர் படத்தில் சாந்தனு கதாபாத்திரம் முக்கியத்துவம் வைத்ததாக அமைத்தால், அது நம்முடைய கதாபாத்திரத்தை ஓவர் டேக் செய்வது போன்று அமைந்துவிடும் என்பதற்காகவே விஜய் படத்தின் இயக்குனரிடம் தெரிவித்து சாந்தனு காட்சிகளை சுருக்க சொல்லியிருக்கலாம் என  கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.