சிம்பு கொடுத்த பில்டப்புக்கு சூரி வைத்த ஆப்பு.. இதுக்கு தான் பேச்சை குறைக்க வேண்டும்

0
Follow on Google News

சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கியிருந்த சிலம்பரசன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது, இந்த நிலையில் மாநாடு படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த நடிகர் சிம்பு, மாநாடு பட வெற்றிக்குப் பின்பு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.

ஆனால் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு படுதோல்வியை சந்தித்தது, இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்கிற தோல்வி படத்தை கொடுத்த சிம்பு அடுத்து அவருடைய இயக்கத்தில் வெளியான பத்து தல பட ஆடியோ வெளியிட்டு விழாவில் வழக்கம் போல் தன்னை தானே புகழ்ந்து கொண்டார்.

தன்னுடைய ரசிகர்களை பார்த்து, இனிமேல் நீங்கள் சந்தோசமாக இருங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் நீங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் என் தலைவன் பாருடா, என்ன பண்ணுகிறான் என்று என் தலைவன் வருவான் டா, என் தலைவன் அப்படி டா இப்படி டா என எதுவுமே வேண்டாம், நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.

நீங்கள் என்னுடைய கஷ்டத்தில் எனக்காக செய்தது போதும், இனிமேல் நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் பாருங்கள், இனிமேல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் சும்மா ஜாலியா, சேர் போட்டு, கூலா ஏசி ரூம்ல உட்கார்ந்து ஹேப்பியா என்ஜாய் பண்ணுங்க, ஏனென்றால் வந்துவிட்டேன், சாதாரணமாக நான் வரவில்லை, வேற மாதிரி வந்து விட்டேன் இம்முறை விடவே மாட்டேன், உங்களை இனிமேல் நான் தலை குனிய விடவே மாட்டேன் என சிம்பு பேசியிருந்தார்.

பலவருடம் பட வாய்ப்பு இல்லாமல் குப்பில் உட்கார்ந்து இருந்த நடிகர் சிம்பு, மாநாடு வெற்றிக்கு பின்பு அடுத்து அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் படுதோல்வி அடைந்ததை மறைந்து விட்டு, இன்னும் மாநாடு வெற்றியை வைத்தே உருட்டி கொண்டிருக்கும் சிம்பு பத்து தல படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் வந்துவிட்டேன், சாதாரணமாக நான் வரவில்லை, வேற மாதிரி வந்து விட்டேன் இம்முறை விடவே மாட்டேன் என்று பேசியிருந்த நிலையில்.

தற்பொழுது பத்து தல படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது, அதில் பத்து தல படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் சிம்பு நடித்த பத்து வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூல், வெந்து தணிந்தது காடு 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை பெற்றது.

ஆனால் பத்து தல வெறும் 40 கோடி ரூபாய்வரைதான் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால், இந்தப் படம் சிம்புக்கு மிக பெரிய சரிவை கொடுத்துள்ளது. மேலும்.பத்து தல படம் படுதோல்விக்கு முக்கிய காரணமாக பத்து தல படம் வெளியான அதே காலகட்டத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படம் தான் என்றும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வெளியானது.

இதில் விடுதலை படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் கூட, சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்திற்க்கு விடுதலை பரவாயில்லை என்பதால் பத்து தல படத்திற்கு செல்ல வேண்டிய ஆடியன்ஸ் விடுதலை படத்திற்கு சென்றனர், இதனால் ஓவர் வாய் பேசிய நடிகர் சிம்புவின் பத்து தல படத்தை சத்தமே இல்லாமல் துவம்சம் செய்துள்ளார் நடிகர் சூரி.