விஜயகாந்த் இறுதி சடங்கில் தமிழகத்தில் மூளை முதுகெங்கெங்கிலும் இருந்து கடைசியாக ஒரு முறை கேப்டன் முகத்தை பார்த்து விட மாட்டோமா என கண்கலங்கி சென்னையில் சாரை சாரையாக மக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்கள் நியூ இயர் கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்ததால் கேப்டன் உடலுக்கு நேரில் வந்த அஞ்சலி செலுத்த வில்லை என கடும் விமரசனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் நியூ இயர் கொண்டாட்டதை முடித்துவிட்டு களைத்து போய் சென்னை திரும்பியுள்ள முக்கிய நடிகர்கள், சோக முகத்துடன் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீடியா முன்பு கண் கலங்கி பேட்டி கொடுப்பது, அடே இது உலக மகா நடிப்புடா சாமி, என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக அவரவர் நடிப்பு திறமையை காண்பித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் நேரில் வந்த அஞ்சலி செலுத்தாதவர்கள், இப்போது வந்த பேசுவது மக்கள் மத்தியில் மேடம் இது ஆக்சன் மேடம் என கிண்டல் செய்யும் வகையில் அமைத்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் அவரது இரு மகனுடன் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மறைந்த நடிகர் கேப்டனுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறி பேசிய தனுஷ், “ராசாவே உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடி விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
உடனடியாக அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கோரசாக பாடி மனம் உருகினர். காட்டுத் தீயாய் வைரலான இந்த வீடியோ, கேப்டன் ரசிகர்களையும் இணையவாசிகளையும் கொந்தளிக்கச் செய்தது. பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூட விமர்சித்திருந்தார். அதாவது, “உங்க பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்த இடத்துல இருந்து அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகுமா கேப்டனின் நினைவிடம் இருக்கும் இடம்?
அதைவிட்டுட்டு இங்க பாட்டு பாடி பெர்ஃபாம் பண்றீங்க? அருமை கேப்டன் மில்லர் ஐயா. அருமை.” என்று தனுஷை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார். இவரைப் போலவே இனையவாசிகள் பலரும் தனுசை விமர்சித்து இருந்தனர்.ப்ளூ சட்டை மாதிரி இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டு இருந்தார். “அதாவது தனுஷின் சகோதரிக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தபோது,
அவரது அப்பா கஸ்தூரிராஜா விஜயகாந்திடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக, கஸ்தூரிராஜா வீட்டுக்கு கிளம்பி சென்ற விஜயகாந்த் காலை 11 மணி அளவில் அவர்களை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று தனுஷின் சகோதரிக்கு அட்மிஷன் உறுதியாகும் வரை பொறுத்திருந்து முடித்து கொடுத்துவிட்டு இரவு 9 மணிக்கு தான் கிளம்பி இருக்கிறார்” இது குறித்து கஸ்தூரிராஜா அவர்களே ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப்படி ஓடோடி வந்து உதவி செய்த கேப்டனுக்கு இதுவரை நடிகர் தனுஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால் விஜயகாந்த் மரணத்தில் திரண்டு மக்களின் கூட்டத்தை பார்த்ததும், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற பெயரில் படத்தை ப்ரோமோ செட் செய்ய முயற்சித்திருக்கிறார் இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.