நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இயக்குனர் மகில் திருமேனிக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு விக்னேஷ் இவனுக்கு கொடுக்கப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக விக்னேஷ் சிவனுக்கு படத்தின் முழு ஸ்கிரிப்ட் எழுதும் பணி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனின் முழு ஸ்கிரிப்ட் கேட்ட அஜித் செம டென்ஷனில் இந்த ஸ்கிரிப்ட் எழுத தான் உங்களுக்கு எட்டு மாதம் தேவைப்பட்டதா.?. இது போன்ற குப்பை கதையில் எப்படி நடிக்க முடியும் என்று ஒரே முடிவோடு வேறு ஒரு இயக்குனரை மாற்றிவிட்டார். அந்த வகையில் அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்புகள் மகிழ் திருமணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே விக்னேஷ் அவனிடம் ஏமாந்தது போன்று இம்முறை இருந்துவிடக் கூடாது என்பதற்காக படத்தின் முழு ஸ்கிரிப்ட் கொண்டு வந்த பின்பே படத்தின் இயக்குனருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தயாரிப்பு நிறுவனமும் நடிகர் அஜித்குமாரும். அந்த வகையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக தீவிரமாக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மகிழ்திருமேனி.
இந்நிலையில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்ற அப்டேட் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அஜித் தந்தை மறைந்துள்ளதால், ஏப்ரல் மாதம் இறுதியில் புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் அல்லது மே 1ம் தேதி அஜித் பிறந்த தினத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.