இரண்டு வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களை இப்படி செய்யலாமா.? வலிமை படம் எப்படி இருக்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ள படம் வலிமை. தொழிநுட்பத்துடன் பார்ப்பதற்கு பிரமிட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது வலிமை. தமிழ்நாட்டில் படித்து முடித்த வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து அவர்களை மூளை சலவை செய்து தங்கள் கும்பலில் சேர்ந்து கொள்கிறது அந்த சட்டவிரோத கும்பல், இவர்களுக்கென ஒரு தனி இணையதளம் ஓன்று உள்ளது, இந்த இணையதளத்தை இந்த கும்பலை தவிர்த்து மற்ற யாரும் பார்க்க முடியாது.

ஒரு மிக பெரிய இளைஞர்களை கொண்ட அந்த கும்பல், அனைவருக்கும் பைக் சாகசங்களை கற்று கொடுத்து அவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைக்கிறது. ஒரே நேரத்தில், பல இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது, ஒரே நேரத்தில் பல இடங்களில் கொள்ளை அடிப்பது, வெளிநாடுகளில் இருந்து வரும் போதை பொருட்களை விற்பனை செய்வது. என அனைத்தும் நவீன தொழில் நுட்பத்துடன் இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.

இந்த கும்பலில் சிக்கியுள்ள இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வேறு ஒரு உலகத்தில் வாழ்வது போன்று, அந்த கும்பலின் தலைவன் கட்டளையை ஏற்று எதையும் செய்ய கூடியவர்களாக உள்ளனர், இந்த கும்பலை பிடிக்க காவல்துறை உயர் அதிகாரியான நடிகர் அஜித் குமார் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் போது அந்த கும்பலில் தனது தம்பியும் இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறார், பின் எப்படி அந்த சட்டவிரோத கும்பலை துவம்சம் செய்து தம்பியை காப்பற்றுகிறார் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.

படத்தில் இடம் பெற்றுள்ள தாய் மற்றும் மகன் இடையே நடக்கும் செண்டிமெண்ட் காட்சிகள், அண்ணன் மற்றும் தம்பி இடையே நடக்கும் செண்டிமெண்ட் காட்சிகள், தனது குடும்பத்தினருக்காக திருமணமே செய்யாமல் இருக்கும் அஜித் என அவர் அம்மா பேசும் வசனம் இந்த படத்தின் கதையோடு ஒட்டவில்லை என்றே சொல்லலாம், ஆக மொத்தத்தில் இந்த படத்துக்கு செண்டிமெண்ட் காட்சிகள் தேவையே இல்லை என சொல்லும் அளவுக்கு இருந்தது.

மேலும் அஜித் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் மது போதையில் செய்யும் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு பதில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என்றே சொல்லலாம், இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகள் அபாரம், இதுவரை தமிழ் சினிமாவில் இது போன்ற சண்டை காட்சிகள் இடம்பெறவில்லை என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு ஹாலிவுட் பட பாணியில் இருந்தது சண்டை காட்சிகள். படம் முழுக்க பைக் சம்பந்தமான காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்ததால்.

இந்த படம் அஜித்காக உருவாக்கப்பட்ட கதை போன்றே இருந்தது, நல்ல கதை, ஆனால் திரைக்கதை அமைப்பில் பார்ப்பவர்களை குழப்பிவிட்டார் இயக்குனர், மேலும் குடும்ப காட்சிகள் இந்த படத்துக்கு தேவையற்றதாக அமைத்துள்ளது, மொத்தத்தில் அஜித் வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடட்டதை கொடுத்தாலும் பலர் படம் முடிவதற்குள் திரையரங்குகளை விட்டு வெளியேறியதை காண முடித்தது குறிப்பிடதக்கது.