பிரபல சினிமா பைனான்ஸியர் மதுரையை சேர்ந்த அன்புச்செழியன், மதுரையில் வட்டி தொழில் செய்து வந்த இவர் சினிமா விநியோகஸ்தர்களிடம் கிடைத்த நட்பினால் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ய தொடங்கியவர், ஒரு காலத்தில் தமிழ் சினிமா மார்வாடிகள் கட்டுப்பாட்டில் இருந்ததை மீட்டு, இன்று தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்கள் யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் அவர்கள் சென்று தட்டுவது அன்புசெழியன் வீட்டு கதவை தான். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் அன்பு செழியன்.
அன்பு செழியன் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பர், குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பி தரவில்லை என்றால், வட்டியை அதிகப்படுத்துவார், மேலும் படம் தோல்வியை தழுவி பணத்தை திருப்பி தரமுடியவில்லை என்றால், அவர்களின் அடுத்த படத்தின் விநியோக உரிமையை வாங்கி கொள்வார் அன்பு செழியன், இந்நிலையில் சமீபத்தில் நடந்த அன்பு செழியன் மகள் திருமண நிகழ்வில் ரஜினி, கமல், என திரை உலகை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆனால் நடிகர் அஜித்குமார் மட்டும் வரவில்லை, தனது மகள் திருமணத்துக்கு நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க அவருடைய மேனேஜரை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டுள்ளார் அன்புசெழியன், ஆனால் அன்பு செழியனை சந்திக்க அஜித்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அஜித்குமாருக்கு திருமணம் அழைப்பிதழை அன்புசெழியன் கொடுக்க முடியாமல் போனது. அஜித் எதற்காக அன்புசெழியனை சந்திக்காமல் புறக்கணித்தார் என விசாரித்ததில்.
அன்பு செழியன் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் பைனான்ஸ் செய்ய தொடங்கிய போது, மதுரையை சேர்ந்த இயக்குனர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது, அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட பின்பு அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்துள்ளார் அன்பு செழியன், இதனை தொடர்ந்து பாலா மீது ஏற்பட்ட மோதல் காரணமாக நான் கடவுள் படத்தில் இருந்து விலகினார் அஜித்குமார்.
இதனை தொடர்ந்து இந்த பஞ்சாயத்தில் பைனான்சியர் அன்புசெழியன் டீல் செய்ய தொடங்கினர், எவ்வளவோ பேசியும் அஜித் மீண்டும் பாலா படத்தில் நடிக்க ஒப்பு கொள்ள வில்லை, இதனை தொடர்ந்து அஜித்தை தனி அறையில் வைத்து அன்புச்செழியன் மிரட்டியும் அஜித்குமார் சம்மந்தம் தெரிவிக்கவில்லை, மேலும் அந்த தனி அறையில் அஜித்தை அவமானம் செய்யும் வகையில் அன்புசெழியன் மற்றும் இயக்குனர் பாலா நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழைய சம்பவங்களை மறந்து தனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க அஜித்தை நேரில் சந்திக்க அன்பு செழியன் முயற்சி செய்தபோது, தனக்கு நடந்த பழைய அவமானங்களை மறக்காமல் அன்புசெழியனை சந்திக்க மறுத்துவிட்டார் அஜித்குமார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இதே போன்று அன்புசெழியன் அழைப்பிதழ் கொடுத்தும் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.