தன்னபிக்கை கொண்ட,தலைக்கனம் இல்லாத நடிகர் அஜித்குமார். தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித் முதல் இடம். ஒட்டுமொத்த சினிமா துறையினரிடம் இருந்து தன்னை தனிமை படுத்திக்கொண்ட நடிகர் அஜித் குமார், குறிப்பிட்ட சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தவிர மற்ற யாருடன் நெருங்கி பழகும் அளவுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காதவர். எந்த ஒரு இடத்திலும் தன்னை விளம்பரம் செய்து கொள்ளாதவர்.
இப்படி தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவம் பெற்ற நடிகரான அஜித் நடவடிக்கைகள் பல சுவாரசியம் நிறைந்தது. சென்டிமென்ட் அதிகம் பார்க்க கூடியவர் அஜித்குமார். இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் முளுமையாக கதை ஏதும் கேட்காமல் அவர்கள் கொண்டு வந்த கதையை வாங்கி ஒரு பத்து நாட்கள் வைத்து கொள்வாராம், அந்த இடைப்பட்ட பத்து நாட்களில் எதாவது விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் அந்த கதையை நிராகரித்து விடுவார் அஜித் என்றும்.
மேலும் அந்த பத்து நாட்களில் எதாவது மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நடைபெற்றால் உடனே அந்த இயக்குனரை அழைத்து முழு கதையையும் கேட்பார் அஜித்குமார் என்று கூறப்படுகிறது. மேலும் மற்றவர்களுக்காக குரல் கொடுக்க கூடிய நடிகர்களில் முதன்மையானவர் அஜித்குமார். இதனால் அவர் சந்தித்த கஷ்டம் அதிகம். அனாலும் எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிகொள்ள கூடியவர் அஜித்குமார்.
கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நடிகர், நடிகைகள் கட்டாயப்படுத்தி வரவழைக்க படுவதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு மேடையில் கர்ஜித்தவர் அஜித். இவரின் இந்த பேச்சுக்கு கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அஜித் தைரியமான பேச்சுக்கு பாராட்டு தெரிவித்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் பகிரகமாக மிரட்டல் விடுத்தனர்.மேலும் திரைமறைவில் அஜித்குமாருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த நடிகர், நடிகைகளுக்காக அஜித் பேசினாரரோ, அதில் ஒருவர் கூட அஜித்துக்கு துணையாக நிற்கவில்லை. இது சினிமா துறைக்காக குரல் கொடுத்த அஜித் முதுகில் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் குத்தியது போன்று அஜித் அப்போது உணர்ந்ததாக கூறப்படுகிறது.
மேடையில் அஜித் பேசிய போது எழுந்து நின்று கைதட்டிய ரஜினி கூட அஜித்துக்கு ஆதரவாக இல்லாமல். இந்த விஷயத்தில் கருணாநிதி மற்றும் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து சமாதானம் செய்யும் முயற்சியை தான் ரஜினி செய்து வந்தார். அஜித்தை தொடர்புகொண்டு ரஜினி பேசியதை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கருணாநிதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார் அஜிகுமார்.
இதன் பின்பு தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்த சினிமாவும் தனக்கு ஆதரவாக இல்லை என்பதால் கோபம் அடைந்த அஜித் குமார். இந்த விவாகரத்துக்கு பின்பு தான் சினிமா தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை என்கிற முடிவை எடுத்ததாகவும், மேலும் சினிமா துறையை சேர்ந்த யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை, மதிப்பதில்லை என கூறப்படுகிறது.