அஜித், விஜய்.. ரெண்டு பேருமே ஓரமா போய் விளையாடுங்கப்பா…அடித்து துவம்சம் செய்த ரஜினிகாந்த்..

0
Follow on Google News

வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… 25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு அப்படின்னு சூப்பர் ஸ்டார் பேசுன டயலாக்குக்கு ஏற்ற மாதிரியே, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம், சில நாட்களிலேயே பல கோடிகளை குவித்து சூப்பர் ஸ்டார்க்கான மவுச பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

ஆமாங்க, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிய நிலையில், ரசிகர்களிடமிருந்து எக்கச்சக்கமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது. மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களை களமிறக்கிய நெல்சன் தலைவர் ரஜினிக்கேற்ற தரமான படத்தை கொடுத்திருக்கிறார் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், படத்திற்கு அனிருத் போட்டுள்ள மெரட்டலான இசை ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கிறது . இவ்வாறு விமர்சனங்களில் மட்டுமின்றி வசூலிலும் ஜெயிலர் படம் சாதனை படைத்து வருகிறது. அதாவது படம் வெளியாகி இரண்டாவது நாளிலேயே 150 கோடி வசூல் செய்துள்ளதாக வசூல் ரிப்போர்ட்டில் வெளியானது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் ரசிகர்கள் கூட்டம் ஜெயிலர் படம் திரையிடப்படும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியுள்ளன. அந்த வகையில், ஜெயிலர் 68 கோடி வரை வசூலித்து அலப்பறை செய்து வருகிறது. ஆகவே, மூன்று நாட்களிலேயே உலக அளவில் 220 கோடி வசூலைத் தாண்டிய ஜெயிலர் படம், அடுத்த கட்டமாக 300 கோடி வசூல் சாதனையை முறியடிக்கும் இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜெயிலர் படத்தின் மூலம், பல படங்களின் சாதனையை சூப்பர் ஸ்டார் முறியடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால், வசூல் வேட்டையில் இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இரண்டு படங்களின் வாழ்நாள் வசூலையும் ஜெயிலர் திரைப்படம் முறியடித்து விட்டதாக கோலிவுட்டில் பலரும் திகைத்துப் போயுள்ளனர்.

இதே வேகத்துடனும் ஆரவாரத்துடனும் வரும் வாரங்களில் ஜெயிலர் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்ததாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 420 கோடி வசூலையும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 500 கோடி வசூலையும் முறியடித்து விடும் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் கோலிவுட்டில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் ரெக்கார்ட் ப்ரேக் செய்வார் என்றும் கருத்துகள் பரவி வருகின்றன. அதாவது ஷாருக்கானின் பதான் செய்த 1000 கோடி வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்கும் என்று பல ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.