தலைக்கனத்தில் ஆடும் அஜித்….தரமான சம்பவம் செய்த ரஜினி… இனியாவது திருந்துவரா அஜித்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார், இந்த படத்தின் ஆரம்பத்தில் நடிகர்கள் தேர்வுக்காக ஆடிசன் நடந்துள்ளது, அப்போது பழம்பெரும் நடிகரும், தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என்று என்று அழைக்க கூடிய நடிகர் நாகேஷ் பேரன் விகேஷ் விடாமுயற்சி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு விடாமுயற்சி ஆடிசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் நாகேஷ் மகன் நடிகர் ஆனந்த் பாபு நன்கு அறிமுகமானவர், ஆனால் அவருடைய மகனும், நாகேஷ் பேரனுமான விகேஷ் சினிமாவில் பிரபலமாக அறியப்படாத ஒருவர், நடிகர் சந்தானம் நடித்த சர்வ சுந்தரம் படத்தில் நடித்தவர் தான் நாகேஷ் பேரன், தற்பொழுது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஆடிஷன் நிகழ்வுக்கு சென்ற நாகேஷ் பேரன், அங்கே அஜித்தை பார்க்க முயற்சி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பலம் பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரன் உங்களை பார்க்க வேண்டும் என விரும்புகிறார் என அஜித்துக்கு தகவல் சென்றுள்ளது, ஆனால் அஜித் முடியாது என மறுத்துள்ளார், சார் புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் உங்களை பார்த்தால் போதும் என்கிறார் என்று சொன்ன போதும் முடியாது என மறுத்து விட்டாராம் அஜித், சரி அடுத்த நாள் பார்க்கலாம் என நாகேஷ் பேரனிடம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.

மீண்டும் மற்றொரு நாள் அஜித்தை பார்க்க நாகேஷ் பேரம் முயற்சி செய்தும், அதற்கும் முடியாது என மறுத்து விட்டார் அஜித், அதாவது தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரன் அஜித்தை பார்க்க விருப்பியுள்ளார், இதற்கு காரணம் அஜித்தின் ரசிகராக இருந்துள்ளார் நாகேஷ் பேரன், அஜித் சில வினாடிகள் நாகேஷ் பேரனை வரவழைத்து, ஹாய்.. எப்படி இருக்கீங்க என ஒரு இரன்டு வார்த்தை பேசி அனுப்பி வைத்திருக்கலாம்.

ஆனால் நாகேஷ் பேரனை சந்திக்கவே மறுத்துள்ள அஜித்தின் செயல், ஒரு பலம் பெரும் நடிகர் நாகேஷை அவமரியாதை செய்வது போன்று அமைத்துள்ளது என இந்த சம்பவம் கேள்வி பட்டவர்கள் அஜித் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், ஒரு மூத்த நடிகரின் வாரிசை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு அஜித்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் மைத்துள்ளது ரஜினிகாந்தின் மற்றொரு சம்பவம்.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தில் நடித்த தேங்காய் சீனிவாசன் பேரனை அங்கிருந்தவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்கள், எத்தனை நாட்களாக இந்த படத்தில் நடித்து கொண்டிருக்க என அஜித் கேட்க, அதற்கு தேங்காய் சீனிவாசன் பேரன் ரெம்ப நாட்களாக நடிக்கிறேன் என்று சொன்னதும், ராஸ்கல் எங்கிட்ட சொல்ல கூடாது நீ தேங்காய் சீனிவாசன் பேரன் என்று முதுகில் செல்லமாக இரண்டு தட்டு தட்டிய ரஜினிகாந்த்.

உடனே இயக்குனர் சங்கரை அழைத்து, இந்த பையன் அதிக காட்சிகளில் வரும் படி வாய்ப்பு கொடுங்க என்று சொன்ன ரஜினிகாந்த், அந்த காலத்தில் அவருடைய தாத்தா தேங்காய் சீனிவாசன் உடன் பழகிய சம்பவங்களை அவருடைய பேரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த், இந்நிலையில் ஒரு மூத்த நடிகரின் வாரிசுகளை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ரஜினியிடம் இருந்து நடிகர் அஜித் கற்று கொள்ள வேண்டும் என்பது போன்று அமைத்துள்ளது அஜித் நாகேஷ் பேரனிடம் நடந்து கொண்ட முறையும், ரஜினி தேங்காய் சீனிவாசன் பேரனிடம் நடந்து கொண்ட முறையும் என்கின்றனர் இந்த இரண்டு சம்பவங்களை பற்றி அறிந்து கொண்டவர்கள்.