டென்ஷனாகி சிறுத்தை சிவாவிடம் கொந்தளித்த அஜித்குமார்..! இருவருக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்த படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருக்கும் அஜித், அந்த படம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். அஜித் ஒரு படம் நடித்து முடித்த பின்பு தான் அவரின் அடுத்த படத்தின் அப்டேட் வரும், ஆனால் தற்பொழுது அவரின் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு அப்டேட் வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் AK 63 படம் கிராமத்து கதைக்களம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார் சிறுத்தை சிவா, நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகளிலும் இறங்கியுள்ளார் சிறுத்தை சிவா. படம் கிராமத்து கதை களம் என்பதால் நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவை நடிக்க வைக்கும் முடிவில், அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார் சிறுத்தை சிவா.

இதற்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவை நேரில் சந்தித்த நடிகர் அஜித்குமார் AK 63 படம் குறித்து கேட்டுள்ளார், அதற்கு படத்தின் படப்பிடிப்புக்கான இடங்கள், மற்றும் திரைக்கதை குறித்து படத்தை கண்முன்னே காண்பிப்பது போன்று அஜித்துக்கு விளக்கமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா, அப்போது அந்த படத்தில் வடிவேலு நடிப்பது பற்றி தெரிவித்துள்ளார் சிவா.

இதை கேட்டு நடிகர் அஜித்குமார் செம்ம டென்ஷனாக்கியுள்ளார். எதற்காக வடிவேலுவை இந்த படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தீர்கள். உடனே அதை கைவிட்டுவிட்டு வேறு ஒரு நடிகரை தேர்வு செய்யுங்கள் என்று அஜித்குமார் தெரிவிக்க. அதற்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல், அப்படியே ஆகட்டும் என்று சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். பின்பு சில நிமிடங்களில் கூலான அஜித்குமார் மற்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் கோபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது, அஜித் நடிப்பில் வெளியான ராஜா படத்தின் படப்பிடிப்பு கொடைகானலில் நடந்தது, இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்தை வாடா..போடா.. என்று அழைத்துள்ளார் வடிவேலு. இது நடிகர் அஜித்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாதையாக பேச இயக்குனர் அறிவுறித்தியுள்ளார்.

ஆனால் வடிவேலு கேட்பதாக இல்லை. என்னை விட வயது குறைவு தானே, சினிமாவில் நான் அவனுக்கு சீனியர் தானே என்று வடிவேலு பதிலளித்துள்ளார். இதன் பின்பு தான் நடிக்கும் படங்களில் வடிவேலுவை நடிக்க வைக்க கூடாது என இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் அஜித் என்று கூறப்படுகிறது, இது தான் அஜித் டென்ஷனாகி சிறுத்தை சிவாவிடம் கோபமாக பேசுவதர்க்கு காரணம் என கூறப்படுகிறது.

ஒரு நிமிடம் கூட அங்க இருக்க கூடாது..தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்த ஐஸ்வர்யா.! என்ன நடந்தது தெரியுமா.?