விஷால் போட்ட திட்டம்…. உடைத்தெறிந்த அஜித்..! அப்ப விஷாலுக்கு திருமணமே ஆகாதா.? என்ன திட்டம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சங்க தலைவராக சரத்குமார், பொதுச் செயலாளராக ராதாரவி ஆகியோர் இருந்த போது, சினிமா தொடர்பான அணைத்து பிரச்சனைகளுக்கும் சுமுகமாக பேசி சரி செய்து வந்தனர், சினிமாவுக்கு தேவையான அணைத்து அரசியல் உதவிகளையும் பெற்று தந்து வந்தனர் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர். இந்நிலையில் நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பான பிரச்சனை நடிகர் சங்கத்தில் மிக பெரிய மோதலை உருவாக்கியது.

மேலும் தொடர்ந்து ராதாரவி உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிட விவகாரத்தை தனக்கு சாதகமாக்கி சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கினார். கமல்ஹாசன், நடிகர் சிவகுமார் போன்ற முன்னனி நடிகர் ஆதரவை பெற்று அடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை தோற்கடித்து வெற்றி பெற்ற விஷால் அணியினர் நடிகர் சங்கத்தை கைப்பற்றினார்கள்.

நடிகர் சங்க விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் அஜித் குமார் தலையிடுவது கிடையாது, நடிகர் சங்கம் தேர்தலின் போது, வாக்கு அளிக்க கூட வராமல் புறக்கணித்தார் அஜித்குமார், இந்நிலையில் நடிகர் சங்கத்தை கைப்பற்றிய பின்பு, நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அதில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடக்கும் முதல் திருமணம் என்னுடைய திருமணம் தான் என சபதம் செய்தார் விஷால்.

இந்நிலையில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டும் வகையில், நட்சத்திர கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் என விஷால் நடத்த திட்டமிட்டு அதில் இருந்து வரும் பணத்தில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த நடிகர் அஜித் குமார், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு எதற்காக மக்களிடம் வசூல் செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அணைத்து நடிகர்களும் முன் வந்தாலே நடிகர் சங்கம் கட்டிடம் கட்டலாம் என நடிகர் தெரிவித்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, மக்களும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தனர், இதனால் எதிர்பார்த்த வசூலை பெற முடியவில்லை. இதே போன்று மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாதால், விஷாலின் திட்டம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நட்சத்திர கலை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு நடிகர் அஜித் ஆதரவு தெரிவித்திருந்தால், இந்நேரம் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு அதில் விஷால் திருமணம் நடந்து முடித்திருக்கும் ஆனால் விஷால் கட்டி வைத்திருந்த கனவு கோட்டையை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டார் அஜித் குமார் என்றும், இனி எப்ப நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்க, அதில் எப்ப விஷால் திருமணம் செய்ய என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.