ஆஸ்கர் விருதில் தவறான படங்கள்.. ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு குற்றசாட்டு.. வயித்தெரிச்சலுக்கு காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உலக சினிமாவை இந்திய சினிமாவை நோக்கி திசை திருப்பி உலக அரங்கில் தமிழின் பெருமையை நிலை நாட்டினார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்ற 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ளது

இந்தியாவை சேர்ந்த கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெற்றுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்கர் விருது குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பேட்டி ஓன்று வைரலாகி வருகிறது அதில், பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், நாம் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும், ஆனால் அதையும் தாண்டி எனக்கு ஆர்வம் இருந்தது. ஹாலிவுட் திரையுலகினரால் செய்யும் முடியும் ஒரு விஷயத்தை ஏன் நம்மால் முடியாது?

நாம் அவர்களின் இசையைக் கேட்கும்போது, ​​ஏன் அவர்களால் நம் இசையைக் கேட்க வைக்க முடியாது? என்பது போன்ற கேள்விகளை எனக்குளேயே நான் கேட்டுக்கொண்டே இருந்தேன் என தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான். “சில நேரங்களில், இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது வரை செல்கிறது, ஆனால், அவர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன என ஏ.ஆர்.ரகுமான் பேசிய பேட்டி ஓன்று வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியை சுட்டி காட்டி, ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசை அமைப்பாளாருக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால், அதை ஏற்று கொள்ள முடியாமல், ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன என வயிற்றிச்சலில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகிறார் என சிலர் விமர்சனம் வைத்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரகுமான் பேட்டியின் உண்மை தண்மை விமர்சனம் செய்து வருகிறர்வர்களுக்கு தெரியவில்லை என்கிற உண்மை அம்பலமாகியுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் சில திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்படும், அந்த வகையில் மிக பெரிய வெற்றியை பெற்று இந்தியா முழுவதும் கொண்டாட பட்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திடப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்படவில்லை.

ஆனால், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பரிந்துரை செய்யவில்லை என்றாலும் கூட, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் ஏஜென்ட் மூலமாக நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்து தான் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்கள், இதன் அடிப்படையில் தான், ஆர்.ஆர்.ஆர். போன்ற வெற்றி பெற்ற படங்களை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட வில்லை என்பதை மனதில் வைத்து கடந்த ஜனவரி மாதம் பேட்டி ஒன்றில் ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன என ஏ.ஆர்.ரகுமான் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான், அதில் கீரவாணி மற்றும் சந்திர போஸ் ஏற்கனவே விருதுக்கு கணிக்கப்பட்ட தகுதியானவர், உங்கள் இருவருக்கும் மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ என ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து செய்தியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.