சொன்ன தேதியில் விடுதலை வெளியாவதில் சிக்கல்… பாவம்யா… சூரிக்கு எப்ப தான் விடுதலை கிடைக்குமோ.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து சூரி கால் சீட் கொடுத்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு இந்த படத்தில் கமிட்டான நடிகர் சூரிக்கு எப்படா விடுதலை கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு சமீபத்தில் படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டு ஆடியோ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிலையில் ஹீரோவாக இந்த படத்தில் கமிட்டானதால் பல காமெடி வாய்ப்புகளை இழந்த நடிகர் சூரி, இருந்தாலும் வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானால் அடுத்தடுத்து இந்த படம் ரிலீஸ் ஆன பின்பு சூரிக்கு வரவேற்பு சினிமாவில் மிகப்பெரிய அளவில் இருக்கும், மேலும் ஹீரோ வாய்ப்புகள் பெரும் அளவு சூரிக்கு குவியம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில் விடுதலைப் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். சூரி. மேலும் அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது, இதற்கு காரணம் விடுதலைப் படும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றால் சூரியின் சம்பளம் பல மடங்கு உயரும் என்பதால் விடுதலை படம் வெளியாவதற்கு முன்பே ஹீரோவாக பல தயாரிப்பாளர்கள் அவர்களின் படத்தில் சூரியை கமிட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதி விடுதலைப் படம் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தற்போது கூறப்படுகிறது. இதற்கு காரணம் மேலும் படத்திற்கான வேலைகள் பல இன்னும் முடிவடையாத காரணத்தினால் தியேட்டர் வெளியிடும் தேதி உறுதியாக உறுதிப்படுத்தவில்லை என்றும், படத்தின் சிறு சிறு வேலைகள் இன்னும் இருப்பதால் இம்மாத இறுதிக்குள் விடுதலை படம் வெளியாகுமா என்கின்ற சந்தேகம் வலுத்து வருகிறது.