ரஜினிக்கு கிட்னி கொடுத்தவர் இன்றைய நிலை என்ன தெரியுமா.? ரஜினி குடும்பத்தினர் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக தனி விமானத்தில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார் ரஜினிகாந்த்.

அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், கோடான கோடி தமிழக மக்களின் பிராத்தனை பலனாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து தமிழகம் திரும்பினார். ரஜினிகாந்துக்கு கிட்னியை கொடுத்த சஞ்சய் என்கின்ற நபர், ரஜினியின் கிட்னி அறுவை சிகிச்சைக்கு பின்பு தொடர்ந்து, ரஜினியின் விருப்பத்திற்காக போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் தங்கினார்.

தனக்கு மறுவாழ்வு கொடுத்த சஞ்சையை தன் அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையில் ரஜினியும் போயஸ் கார்டனில் அவர் இருப்பதை மகிழ்ச்சியாக கருதினார். ஆனால் நாளடைவில் ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கும் சஞ்சைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னால் ரஜினிகாந்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த கூடாது என முடிவு செய்த சஞ்சய் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

ரஜினிகாந்த் மூலம் கிரிக்கெட் வீரர் டோனி உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற சஞ்சய். தமிழ் சினிமா படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற டோனி ஆசையை நிறைவேற்றும் வகையில், டோனி தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு மற்றும் அந்த நிறுவனத்தின் மானேஜராகவும் இருந்து வந்தார். டோனி தயாரிக்கும் முதல் படம் நடிகர் விஜய் நடிப்பில் இருக்க வேண்டும் என முடிவு செய்து விஜய் உடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு கால் சீட் இல்லை என விஜய் கை விரித்து விட்டார். இதன் பின்பு நடிகர் ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட் படங்களை இயக்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார் சஞ்சய், ஆனால் தற்பொழுது தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர் தற்பொழுது சொந்தமாக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தன்னுடைய தயாரிப்பில் நடிக்க நடிகர் யோகி பாபு மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து அவர்களின் கால் சீட்காக காத்திருக்கிறார் சஞ்சய். இந்நிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து சஞ்சய் வெளியேறி இருந்தாலும் கூட. தற்பொழுது வரை தினமும் ரஜினியுடன் தொலைபேசியில் சஞ்சய் பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.

அதே நேரத்தில் பொதுவாக ரஜினிகாந்தை சந்திக்க எந்த ஒரு முக்கிய பிரமுகர்கள் வந்தாலும், ரஜினிகாந்த வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் அமர வைத்து பின்பு ரஜினிகாந்த் வந்து சந்தித்து பேசுவார். ஆனால் சஞ்ஜையின் பெற்றோர்கள் அவ்வப்போது ரஜினிகாந்த் வீட்டிற்கு வரும் போது, ரஜினிகாந்த் தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டு வாசலில் வந்து வரவேற்று அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

அதே போன்று அவர்கள் புறப்பட்டு செல்லும் போது வீட்டு வாசலில் வந்து வழி அனுப்பி வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிக்கு கிட்னி கொடுத்து மறுவாழ்வு கொடுத்த சஞ்சய், போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக அவர் குடும்பத்தினர் காரணமாக இருந்தது, ரஜினிகாந்த் குடும்பத்தினர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.