தப்பித்து ஓடிய விஜய்சேதுபதி.. வசமாக சிக்கிய சூரி… தொடரும் வெற்றிமாறன் அட்டூழியம்..!

0
Follow on Google News

நடிகர் சூரி வருத்தத்திற்கு 15 படங்களுக்கு மேல் ஒரு பிசி காமெடி நடிகனாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உன்னை ஹீரோவாக்குகிறேன் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து விடுதலை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் வெற்றிமாறன்.கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் விடுதலை இந்த படத்திற்காக நடிகர் சூரி உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை மிக கட்டுக்கோப்பாகினார்.

மேலும் ஹீரோவாக நடிப்பதால் பல காமெடி வாய்ப்புகளை இழந்தார் சூரி. தொடர்ந்து விடுதலை படத்திற்காக கால் சீட் கொடுப்பதால் புதிய காமெடி படங்களில் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் சூரி. இதனால் காமெடி பட வாய்ப்புகள் நடிகர் யோகி பாபுவுக்கு குவிய தொடங்கியது, இதை நடிகர் யோகி பாபு சரியான நேரத்தில் தனதாக்கி கொண்டு வருடத்திற்கு சுமார் 20 படங்களுக்கு மேல் நடிக்கும் பிசி காமெடி நடிகரானார்.

விடுதலை படம் வெளியானால் தன்னுடைய சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என சூரி மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தார். ஆனால் படம் தொடங்கி சுமார் மூன்று வருடங்கள் ஆன நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும் ஆரம்பத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாமல் விடுதலை படத்திற்குள் விஜய் சேதுபதியை கொண்டு வந்தார்.

இதனால் சூரியின் படம் விடுதலை என்கிற பெயர் மாறி, விஜய் சேதுபதியின் விடுதலை படம் என்று சினிமாரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள், இது நடிகர் சூரிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் சூரி கொடுத்த கால் சீட் முடிந்து மேலும் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்த பின்பு ஏற்கனவே சூரி நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டு மேலும் படப்பிடிப்பு தொடங்கியது.

விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் நடித்து முடித்த பின்பு, மேலும் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லை என இருவரிடமும் மேலும் கால் சீட் கேட்டார் வெற்றிமாறன். என்னடா இது தெரியாமல் வந்து சிக்கிவிட்டோம் என விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் மேலும் கால் சீட் கொடுத்து நடித்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது என்கிற ஒரு தகவல் வெளியானது.

ஆனால், சூரி நடித்த காட்சிகள் சில திருப்தியில்லை என மேலும் சூரியிடம் கால் சீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன், வசமாக சிக்கி விட்டோம், வேறு வழியில்லை என சூரி மேலும் கால் சீட் கொடுத்துள்ளார். இருந்தாலும் வெற்றிமாறனிடம் இருந்து தப்பித்தோம் என பெருமூச்சு விட்டு ஓட்டம் எடுத்துள்ள விஜய் சேதுபதி. தன்னுடைய மற்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.