இன்றைய (21-11-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : மேன்மை உண்டாகும்.
பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரிஷபம்
கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த சில செயல்பாடுகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதுவிதமான அனுபவத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
ரோகிணி : தாமதங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுபவம் மேம்படும்.

மிதுனம்
உத்தியோக பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படலாம். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : அனுபவம் மேம்படும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.

கடகம்
பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம் ஆகும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம்
பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரம் : தெளிவு உண்டாகும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.

கன்னி
எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

துலாம்
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். களிப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்
எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செயல்பாடுகளில் கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : சேமிப்புகள் குறையும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு
கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். ஆடம்பரமான பொருள்களின் மீது விருப்பம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சினமின்றி செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : பொலிவுகள் மேம்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

கும்பம்
எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : நன்மைகள் உண்டாகும்
சதயம் : எதிர்ப்புகள் குறையும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்
விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். ஆதரவான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : அனுபவம் உண்டாகும்.