சூர்யா- ஜோதிகா தம்பதியரை சுற்றி வளைத்த வன்னியர் சங்கம்..! தப்பிக்க வழியின்றி சூர்யா போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்தாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவுக்கு எதிராக வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காலண்டரை மட்டும் மாற்றியமைத்தது படக்குழு, ஆனால் இந்த விவகாரம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவதும், சில கேள்விகள் எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் செய்த தவறுக்கு சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல், ஜெய்பீம் படத்தில் நடந்த தவறை நியாயப்படுத்தி அன்புமணி ராமதாசுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார் நடிகர் சூர்யா. இது ஒரு காலத்தில் பாபா பட விவகாரத்தில் உச்ச நடிகரான ரஜினிகாந்தை அலறவிட்ட பாமகவை ஒரு பொருட்டாகவே கருதாத சூர்யாவின் பதில் அவமானமாக கருத பட்டது. மேலும் இந்த விவகாரத்தை கடந்து சென்றால் பாமகவின் பலம் காலாவதியாகிவிட்டது என தமிழக அரசியலில் பேசப்படும் எனபதால் இந்த விவகாரத்தில் தீவிரம்காட்டியது பாமக.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 15 ஆம்தேதி ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி. ஆனால் சூர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை, அரக்கோணம், ராணிப்பேட்டை என்று பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் போராட்டம் நடத்தி காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

இந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் இப்போது நீதிமன்றங்களை நாடும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் பாமக வழக்கறிஞர்கள். இதன் ஒரு பகுதியாக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி சார்பில். இன்று (நவம்பர் 23) நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில். அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில், சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல வட மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சூர்யா, ஜோதிகாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வன்னியர் சங்கம் மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது. இந்நிலையில் வழக்குகள் மூலம் சூர்யா- ஜோதிகா தம்பதியர்களை வன்னியர் சங்கம் சுற்றிவளைப்பதை முன் கூட்டியே உணர்ந்த நடிகர் சூர்யா இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில்.

தனக்கு எதிராக வழக்கு திருப்பும் பட்சத்தில். நீதிமன்ற வாயிலாக படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க நேரிடும் எனபதால். இந்த வழக்கில் இருந்து தனது மனைவி ஜோதிகா மற்றும் தானும் தப்பிக்க, இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுக்க முழுக்க இயக்குனரின் தவறு தான் இயக்குனர் வாயிலாகவே வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வைத்தது சூர்யாவின் மாஸ்டர் பிளான் தான் என கூறப்படுகிறது.