தக்காளி விலையைக் கேட்டால் நெஞ்சு வலி வரும் போல இருக்கு!

0
Follow on Google News

தக்காளி விலை கிலோ 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்துள்ளது. பருவ மழை அதிகளவில் பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து வழக்கமாக தமிழ்நாட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது சாதாரண ஏழை பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்துள்ளது. வரும் வாரங்களில் விலை படிப்படியாக குறைந்து இயல்புநிலையை எட்டும் என சொல்லப்படுகிறது.