விஜய் சேதுபதியின் மைக்கேல் படத்தில் இணைந்த கௌதம் மேனன்!

0
Follow on Google News

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் ராமின் உதவியாளரான ரஞ்சித் பொற்கொடி புரியாத புதிர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் படம் பெரிதாக கவனம் பெறவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய இதய ராஜாவும் ஸ்பேடு ராணியும் திரைப்படமும் வெற்றிப் படமாக அமையவில்லை.

இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இப்போது அவர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மைக்கேல் என்ற ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.