தன்னுடைய உதவியாளரை இயக்குனராக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

0

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய உதவியாளர் பொன் குமார் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளார். ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர். அதுவே இப்போது அவருக்கு மிகப்பெரிய வில்லங்கம் ஆகிவிட்டது. அவரது சம்பளத்துக்கு அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களை மட்டுமே இயக்கக் கூடிய சூழல் உள்ளது.

ஆனால் தர்பார் தோல்வி காரணமாக விஜய் அவரைக் கழட்டிவிட்டுவிட்டார். இப்போது அனிமேஷன் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளாக செயலற்று இருந்த தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கும் இப்போது உயிர் கொடுக்கும் முனைப்பில் உள்ளார்.

தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் 1947 என்ற வரலாற்று புனைவு திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here