சென்னையில் 1,000 மி.மீ மழை…. உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்… நிற்பேன்..

0
Follow on Google News

கடந்த 200 ஆண்டுகளில் 3-வது முறையாக சென்னையில் 1,000 மி.மீ மழை பதிவாகியுள்ளது.1918 நவம்பர் – 1,088 மி.மீ, 2005 அக்டோபர் – 1,078 மி.மீ, 2015 நவம்பர் – 1,049 மி.மீ, 2021 நவம்பர் – 1,003 மி.மீ மாலை பதிவாகி இருந்தது. சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ் சாலை பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வுச செய்தார்.

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம்,

ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.