சமீப காலமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்தும், திமுக கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு மறைமுகமாக தனது அறிக்கையின் மூலம் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி சமீபத்தில் பிஹாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிர்ணயம் செய்து தனது பலம் என்ன என்பது பற்றி மற்ற கட்சிகளுக்கு காண்பித்தார்.
இதே போன்று தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாவது அணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் ஒவைசி போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளை ஒன்றிணைத்து ஒவைசி கமல்ஹாசன் தலைமையில் வருகின்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் திமுக தலைமை.
இம்முறை ஓவசியுடன் கைகோர்த்து முன்றாவது அணி அமைக்கும் திருமாவை தடுத்து நிறுத்த போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. மேலும் தடுத்து நிறுத்தும் முயற்சியில் திமுக ஈடுபட்டால் தேர்தலில் போட்டியிட அதிக தொகுதியை திருமாவளவன் கேட்பார் என்பதை அறிந்து அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினால் தான் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர முடியும் என திமுக தலைமை திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவுடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய பாமக, 2021ல் திமுக தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாமக துணையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதற்க்கு திமுக தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
திமுக தரப்பில் இருந்து 20 தொகுதிவரை பாமகவுக்கு ஒதுக்கலாம் என தகவல் வெளியான நிலையில் 35 தொகுதிவரை பாமக எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து தனது செல்வாக்கை நிரூபித்து திமுக கூட்டணியில் அதிக தொகுதியை கைப்பற்றி போட்டியிட முடிவு செய்த பாமக இட ஒதுக்கீட்டு விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்தது, ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தி அது பாமகவுக்கு பாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.