சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்ய இருபதாக தகவல் வெளியாகி உள்ளது. சித்ரா மரணத்துக்கு காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் என சித்ரா தயார் கதறி அழுத சம்பவம், மேலும் சித்ரா மரணம் குறித்த விசாரணையில் ஹேமந்த் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்து வருவது சித்ரா மரணத்தின் மீது பல்வேறு சதேகங்கள் எழுந்துள்ளது.
சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடைசியாக அவருடைய கணவருடன் தான் இருந்து வந்துள்ளார், ஹேமந்த்துக்கு சித்ரா பெரும் பண உதவியை தொடர்ந்து செய்து வந்துள்ளார்,மேலும் சித்ரா மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாக ஏதோ ஒரு டாக்குமென்ட்ல் கையெழுத்து போட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த டாக்குமென்ட் குறித்து முழு தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் ஹேமந்த் மொபைல் போனை சோதனை செய்ததில் பல பெண்களுடன் நட்பில் இருந்து வந்துள்ளதும், பல பெண்களிடம் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சித்ரா மரணம் அடைவதற்கு இரு தினகளுக்கு முன் ஹேமந்த் தனது மொபைலில் உள்ள பல விஷயங்களை டெலிட் செய்துள்ளார், மேலும் சித்ராவின் மொபைலில் இருந்து பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து சித்ராவை அதிக பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார் ஹேம்நாத், ஒரு கட்டத்தில் எதற்காக உனக்கு எவ்வளவு பணம் என கேட்ட சித்ரா பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார்,அதன் பின்பே இருவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது,இந்நிலையில் சித்ரா மரணம் குறித்து ஹேமந்த்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் விரைவில் சதேகத்தின் அடிப்படையில் ஹேமந்த் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திமுக, அதிமுக அரசியல் தலைவர்களின் மகன்கள் உடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட ஹேமந்த் சில முக்கிய அமைச்சர் மகன்கள் உடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் பெயரை பயன்படுத்தி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது, இந்நிலையில் ஹேமந்த் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் சித்ரா தற்கொலை மரணம் மேலும் பல சந்தேகங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.