எடப்பாடி மீது ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல்.! தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு விசாரணை தீவிரமா.?

0
Follow on Google News

2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சரான பிறகும் அந்தத் துறையை மற்றவர்களுக்கு விட்டுத் தராமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் நெடுஞ்சாலைத் துறை கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் காமதேனுவாக திகழ்கிறது என்பது தான் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் தார் கொள்முதல் செய்வதில் மட்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான முதன்மை மூலப் பொருள் தார் ஆகும். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க 100 டன் தார் தேவைப்படும் என்பதை அளவீடாகக் கொண்டு, சாலை அமைப்பதற்கான ஒப்பந்த மதிப்பீட்டை அரசு தயார் செய்யும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர் தார் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதற்கேற்றவாறு ஒப்பந்த தொகை மாற்றப்படும். இது தான் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கடைபிடித்து வரும் கொள்கை ஆகும்.

இந்திய சந்தையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாரின் விலை டன்னுக்கு ரூ.41,360 என்ற உச்சத்தை அடைந்தது. இதை அடிப்படையாக வைத்து அந்த ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஒரு டன் தாரின் விலை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.30,260 ஆகவும், 2016-ஆம் ஆண்டில் ரூ.23,146 ஆகவும் குறைந்தது. விதிகளின்படி 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை அப்போது நிலவிய தாரின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத்தொகை தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, 2014-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையும் குறைக்கப்பட்ட தாரின் விலையை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதையுமே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2016-ஆம் ஆண்டில் ஆண்டில் தாரின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத் தொகை கருதப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மட்டும் ரூ.1000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தப் பணிகள் எதுவும் வெளியாருக்கு வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தான் பினாமிகள் பெயரில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்து செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே வெளிச்சந்தையில் தார் விலை குறைந்தாலும் கூட, ஒப்பந்ததாரர்களுக்கு பழைய விலையே கணக்கிடப்பட்டு அதிக தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தார் கொள்முதலில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஏற்கனவே தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி மீது உள்ள குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக, புதியதமிழகம், பாஜக, தாமக போன்ற கட்சிகள் அமைதியாக இருந்து வருவது பின்னனியில் முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி மீது உள்ள ஊழல் குற்றசாட்டு தான் என கூறப்படுகிறது, அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதையே நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலிலே போட்டியிட முடியாது பின் எவ்வாறு முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது என கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி மீது உள்ள வழக்கு நிலவரத்தை பார்த்து முடிவு எடுக்கலாம் என அமைதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி அறிவிப்புக்கு பின் யார் தலைமையில் எந்தந்த கட்சிகள் கூட்டணி என்பது தெரியவரும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?