“தலைவா வா.! உன்னை வைத்து சம்பாதிக்க வேண்டும் வா.! ரசிகர் மீது உள்ள அதிருப்தியால் புதிய கட்சிக்கு ரஜினி குட் பை.!

0
Follow on Google News

நடிகர் ரஜினி நேற்று தன் ஆன்மீக குருவான மகா அவதார் பாபாஜி அவதார நாளில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களை அழைத்து அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அவர் அரசியல் வருகை பற்றி அறிவிப்பு வரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், குறித்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என வழக்கம் போல் தனது ஸ்டைலில் பேசிவிட்டு தனது போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்து அறிவித்த அன்றே அவர் பேசியது இது தான், எனது அரசியல் ஆன்மீக அரசியல், ஏழை மக்களுக்குக்கான அரசியல், ஊழலற்ற அரசியல், தமிகத்தில் சிஸ்டம் சரியில்லை, பணம் சம்பாரிக்க வேண்டும் என்கிற என்னம் இருந்தால் என்னுடன் இருக்க வேண்டாம் என வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் “தலைவா வா, உன்னை வைத்து சம்பாதிக்க வேண்டும் வா, நீ சொல்லி நாங்கள் கேட்கவே மாட்டோம், நாடும் தமிழகமும் எப்படி போனால் என்ன? அதனால் நீ கைகாட்டும் ஆளுக்கெல்லாம் வாக்களிக்க முடியாது, நீ கட்சி தொடங்கு நாங்கள் ஆளுவோம்” என்ற ரஜினிகாந்த்க்கு எதிர்மறையான அவரின் ரசிகர்களின் செயல்பாடு அவருக்கு மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

நல்லாட்சி அமைய ரஜினிகாந்த் கை காட்டும் நேர்மையான ஒரு மனிதரை முதல்வராக ஏற்று கொள்ளமாட்டார்களாம், தேர்தல் முடித்தது கட்சியை களைத்து விடுவோம் என ரஜினிகாந்த் பேசியதை அவரது ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை காரணம் கட்சியை களைத்து விட்டால் அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி சம்பாரிக்க முடியாது என்கிற காரணம் என கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் தனது உடல்நலம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த போது கூட அவருக்கு என்ன நடந்தால் என்ன.? அவர் அரசியலுக்கு வர வேண்டும் நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற பார்வையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவருடைய ரசிகர்கள் எண்ணோட்டம் இருப்பதை காண முடிகிறது.

தன் ரசிகர்கள் பற்றி நன்கு அறிந்த ரஜினிகாந்த் நேற்று நடந்த அவருடைய ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், ரசிகர்கள் மீது உள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் தனது பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்வது குறித்து பேசிய ரஜினி புதிய கட்சி தொடங்குவது குறித்து உறுதியான எந்த தகவலும் தெரிவிக்கவில்லை,இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள் புதிய கட்சி தொடங்குவதை ரஜினிகாந்த் கை விட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.