விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில். பாஜக மூத்த தலைவர் H.ராஜா இது குறித்து கூறுகையில், சனாதன ஹிந்து தர்மம் பற்றி தொடர்ந்து பொய் பரப்பி வருகின்ற அனைத்து ஹிந்து சமுதாய மக்களையும் ஏற்கனவே சரக்கு மிடுக்கு பேச்சால் அவமதித்த தீயசக்தி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும். என தெரிவித்துள்ளார்.
மேலும் முகநூல் பக்கத்தில் திருமாவளவனை கண்டித்து ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்ததை மேற்கோள் காட்டி, இந்த அயோக்கியனை கைது செய்ய வேண்டும் என ஆவேசமாக பதிவு செய்துள்ளார் H.ராஜா, அவர் மேற்கோள் காட்டியுள்ள பதிவு பின்வருமாறு, மனுஸ்மிருதி எத்தனையோ ஸ்மிருதிகளில் ஒரு ஸ்மிருதி அவ்வளவுதான். அது இந்து தருமத்தை வரையறை செய்யவில்லை. சரி அப்படியே திருமாவளவன் சொல்லுகிற மாதிரியே வைத்துக் கொள்வோம்.
புத்தர் பெண்களைக் குறித்து மோசமாக சொல்லியிருக்கிறார் என பௌத்த நூல்களைக் காட்ட இயலும்.
எனவே புத்தரை வணங்குகிற, தன் மக்களை புத்தரை வணங்க சொல்லுகிற திருமாவளவனும் பெண்களை மோசமாக சொல்லுவதாக சொல்லலாமா? புத்தரின் பெண் வெறுப்பு போதனைகளால்தான் திருமாவளவன் ஒரு பெண் அவர் மீது குற்றம் சாட்டும் படி நடந்து கொண்டார் என சொல்லலாமா? ஒரு பெண் திருமாவளவனின் ஆட்கள் தன்னை மிரட்டியதாகக் கூறியதாக செய்திகள் வந்ததையும் இதன் நீட்சியாக பார்க்கலாமா?
பௌத்த சிங்கள ராணுவம் தமிழ் பெண்களிடம் மோசமாக நடந்ததற்கும் இந்த பௌத்த பெண் வெறுப்புத்தான் காரணம் என சொல்லலாமா? அப்படி சொல்லும் அளவு நிர்மூடனாக மடையனாக இருக்கிற ஒருவன் இப்படியும் சொல்லலாம். என்றால் இது பாரபட்சமற்ற நிர்மூட நேர்மை. இல்லையென்றால் இது உள்நோக்கம் கொண்ட ஆபாச அயோக்கியத்தனம். திருமாவளவன் நேர்மையற்ற மன-வக்கிரம் கொண்ட ஒரு அயோக்கிய சிகாமணி என்றே தோன்றுகிறது என வலைதளவாசி பதிவை பகிர்ந்து இந்த அயோக்கியன் கைது செய்யப்பட வேண்டும் என H.ராஜா குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீய சக்தியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக வை வேரோடு வீழ்த்தும் வரை இந்த தீயசக்தி திருமாவளவன் இப்படித்தான் பேசும்.இந்த மூடர் கூட்டம் சமஸ்கிருதம் படிக்காமலே சமஸ்கிருத நூலில் உள்ளதை எப்படி பேசுகின்றனர்?, இந்த இந்து விரோத கும்பல் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த சமூகவிரோதியை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும். பல இந்து உணர்வாளர்கள் நாம் ஒரு தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து என H.ராஜா தெரிவித்துள்ளார்.