இன்றைய ராசிபலன்

0
Follow on Google News

மேஷம்: உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தனவரவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் கவனக்குறைவாக செயல்படுவதினால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். கோபத்தை கட்டுப்படுத்தி அமைதி காப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : அமைதி வேண்டும்.
கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.

ரிஷபம் : பூர்வீகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளும், பொருட்சேர்க்கையும் சிலருக்கு சாதகமாக அமையும். ஆபரணங்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் அவ்வப்போது சோர்வு ஏற்பட்டு மறையும். விவசாயப் பொருட்கள் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் : எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பணியாட்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.

சிம்மம் : எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.

கன்னி : சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினருடன் கேளிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : காரிய அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : வசதிகள் மேம்படும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

துலாம்: வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கான சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து அதை சாதகமாக்கி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சகம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் மூலம் நன்மை உண்டாகும். அலுவலக பணிகளை பதற்றமின்றி மேற்கொள்ளவும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகள் சிலருக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
அனுஷம் : நன்மையான நாள்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.

தனுசு : பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய முயற்சிகளில் வாழ்க்கைத்துணைவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். சுயதொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இறைவழிபாடு தொடர்பான பயணங்கள் சிலருக்கு சாதகமாகும். கோபமான சிந்தனைகளை தவிர்த்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.

மகரம் : இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் விரும்பிய இடத்திற்கு சென்று வருவீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : இழுபறிகள் அகலும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் : வியாபாரம் தொடர்பான செயல்களில் அலைச்சல்கள் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பதற்றமும், தடுமாற்றமும் ஏற்பட்டு மறையும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மீனம் : எந்தவொரு செயலிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையும், நெருக்கமும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.