இன்றைய (23-10-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபிட்சமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
பரணி : ஆசைகள் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம்
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தனவரவுக்கு மேல் தேவைகள் இருக்கும். புரிதல் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : தன்னம்பிக்கையான நாள்.
புனர்பூசம் : தடைகளை அறிவீர்கள்.

கடகம்
வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
பூசம் : சுறுசுறுப்பான நாள்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் பிறக்கும். கலை சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.

கன்னி
குடும்பத்தில் உங்களின் பேச்சிற்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய நபர்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.
அஸ்தம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
சித்திரை : மாற்றமான நாள்.

துலாம்
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிலும் பற்றற்ற தன்மையுடன் செயல்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சேமிப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : குழப்பங்கள் உண்டாகும்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.

விருச்சிகம்
புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். இனிமையான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம் : பயணங்கள் கைகூடும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு
இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : தீர்வு கிடைக்கும்.
பூராடம் : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

மகரம்
குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் பணிகளில் லாபம் மேம்படும். இழுபறியான பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அவிட்டம் : மாற்றமான நாள்.

கும்பம்
உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான நபர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பயணங்கள் கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

மீனம்
செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் மனவருத்தத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெற்றிக்கு அடித்தளமிடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : காலதாமதங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.