இன்றைய (26-09-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வும், மந்தமும் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்
பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : மந்தத்தன்மை குறையும்.
மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

மிதுனம்
எண்ணிய செயல்பாடுகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கனிவான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.
திருவாதிரை : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : லாபம் மேம்படும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

சிம்மம்
உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களை மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மகம் : அறிமுகம் உண்டாகும்.
பூரம் : ஆதாயமான நாள்.
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

கன்னி
உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : புரிதல் மேம்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.

துலாம்
எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். நயமாக பேசுபவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : சேமிப்புகள் குறையும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : சுறுசுறுப்பான நாள்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

தனுசு
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் : அறிவு வெளிப்படும்.
பூராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகரம்
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்களை செயல்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : லாபங்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

மீனம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.